காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் உள்ள ஹடிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இருந்து பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com