என் மலர்
நீங்கள் தேடியது "கியூபா"
- ஹைட்டியில் நதியின் கரைகள் நிரம்பி வழிந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் 120க்கும் மேற்பட்ட தங்குமிடங்களுக்கு இடம்பெயந்தனர்.
- புயல் தற்போது பெர்முடா நோக்கி நகர்ந்து வருகிறது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகள் கரீபியன் தீவுநாடுகள் என அழைக்கப்படுகின்றன. இதில் கியூபா, ஹைதி, ஜமைக்கா, டொமினிக்கன் குடியரசு உள்பட 13 நாடுகள் உள்ளன.
இந்நிலையில் கரீபியன் தீவுகளைத் தாக்கிய சக்திவாய்ந்த மெலிசா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் மெலிசா புயல் ஹைட்டி மற்றும் ஜமைக்காவைத் தாக்கியதைத் தொடர்ந்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஹைட்டியில் குறைந்தது 30 பேரும், ஜமைக்காவில் குறைந்தது 19 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி சென்று சேர்ந்ததில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில பகுதிகளில் பல நாட்களாக குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். உணவுப் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஹைட்டியில் நதியின் கரைகள் நிரம்பி வழிந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் 120க்கும் மேற்பட்ட தங்குமிடங்களுக்கு இடம்பெயந்தனர்.

ஜமைக்காவின் சில கிராமங்களில் அனைத்து கட்டிடங்களும் சூறாவளியால் அழிக்கப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
புயலால் 52 பில்லியன் டாலர்கள் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கியூபாவிலும் புயல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. மெலிசா புயல் தற்போது பெர்முடா நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கியூபாவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள் போல நடிக்கிறார்கள் என்றார்.
ஹவானா:
தீவு நாடான கியூபாவில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் அங்கு மேலும் விலைவாசி அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.
இந்நிலையில், அங்கு பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை மந்திரி மார்த்தா எலினா பீடோ கப்ரேரா ஏழைகள் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறினார்.
அதாவது, பிச்சையெடுப்பவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் ஏழைகள் போல நடிக்கிறார்கள் என விமர்சித்தார்.
அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அவர் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து மார்த்தா எலினா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
- 25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கியூபா - எரிபொருள் விலையை 500% உயர்த்தியுள்ளது.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.
இது இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் ரூ.456க்கு விற்பனையாகும்.
- கியூபாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் அன்டோனியோ குட்டரெஸ்.
- இந்த நிலையம் சேதமடைந்ததால் நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.
ஹவானா:
தீவு நாடான கியூபாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டு வருகிறது.
பொருளாதார சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுதும் செயல்பட்டு வந்த மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியதை அடுத்து, அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமான அன்டோனியோ குட்டோரஸ், தன் உற்பத்தியை நிறுத்தியது. இதனால் நாடு முழுதும் மின்சாரம் தடைபட்டது.
சமீபத்தில் வீசிய மில்டன் சூறாவளி காரணத்தால் குட்டோரஸ் மின் உற்பத்தி நிலையம் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மின்சாரம் தடைபட்டதால், போக்குவரத்து சேவை அடியோடு பாதிக்கப்பட்டது.
கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை செயலிழந்தன. முக்கிய சாலைகள் வெறிச்சோடின. இணையதள சேவையும் பாதிக்கப்பட்டதால், கியூபா மக்கள் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர்.
பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இரவில் செயல்படும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட கலாசார மையங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் ஹவானாவில் அனைத்து வர்த்தகங்களும் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டன. உணவு, எரிபொருள், தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறையால் கியூபா நாட்டு மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மின் தடை அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கி உள்ளது.
- நிலநடுக்கம் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவில் உணரப்பட்டுள்ளது.
- ஜமைக்கா தீவிலும் நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஒடிவந்து தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
பார்ட்டோலோம் மாசாவின் கடற்கரை பகுதியில் தெற்கே 40 கி.மீட்டர் தொலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கியூபாவின் மிகப்பெரிய நகரான சான்டியாகோ டி கியூபாவில் உணரப்பட்டுள்ளது. மேலும் ஹோல்யின், குவான்ட்னாமோ போன்ற நகரிங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அருகில் உள்ள ஜமைக்கா தீவிலும் நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பிலோன் என்ற சிறிய கிராமத்தில் உள்ள வீடுகளில் பாதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து சிலமணி நேரத்தில் பார்ட்டோலோம் மாசா கடலுக்கு அடியில் 22 மைல் ஆழத்தில் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த புதன்கிழமை ரபேல் புயல் வடக்கு கியூபாவை கடுமையாக தாக்கியது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது நிலநடுக்கம் கியூபாவை தாக்கியுள்ளது.
அக்டோபர் மாதம் இறுதியில் மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால் மக்கள் இருளில் சிக்கித் தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனா செலியா டி அர்மாஸ் கேஸோ என்பது இவரின் முழு பெயர்.
- நடிகர் பென் அப்லெக் உடன் காதலில் இருந்த அர்மாஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரேக் அப் செய்து கொண்டார்.
ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை' [ 2021], கிணைவ்ஸ் அவுட் [2019], பிளேட் ரன்னர் 2049, ஜான் விக் நடிகர் கியானு ரீவ்ஸ் நடித்த கினாக் கினாக் உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ் பெற்ற நடிகையாக ஹாலிவுட் அரங்கில் வளம் வருபவர் அனா டி அர்மாஸ். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'THE BLONDE ' படத்தில் தனது நடிப்புக்காக ஆஸ்கார் தேர்வு பட்டியலிலும் இடம்பெற்றார்.
அனா செலியா டி அர்மாஸ் கேஸோ என்பது இவரின் முழு பெயர்.கியூபா - ஸ்பானிய வம்சாவளியை சேர்ந்தவர் இவர். இவரின் தாய் வழியினர் ஸ்பெயினை சேர்த்தவர்கள் ஆவர். கியூபாவில் 1988 இல் பிறந்த அர்மாஸ் அந்நாட்டில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் தோன்றினார். கியூபாவை சேர்ந்த நடிகைகளுள் ஹாலிவுட் வரை சென்று அதிக புகழை ஈட்டியவர் அர்மாஸ். இந்நிலையில் தற்போது கியூபா நாட்டின் அதிபர் மிகுவல் டியாஸ்-கேனல் அவரது மகன் [ stepson ] மானுவல் அனிடோ கஸ்டா உடன் ஸ்பெயினில் ஒன்றாக அனா டி அர்மாஸ் நேரம் செலவிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஸ்பெயின் நாட்டின் மாத்ரித் பகுதியில் இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இருவரும் டேட்டிங் செய்து வருவதாக யூகிக்கப்படுகிறது. முன்னதாக ஹாலிவுட் நடிகர் பென் அப்லெக் உடன் காதலில் இருந்த ஆஅர்மாஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரேக் அப் செய்து கொண்டார்.

இருவரும் டீப் வாட்டர் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அதன்பின் பென் அப்லெக், பாடகி மற்றும் நடிகை ஜெனிபர் லோபஸ் ஐ 2022 இல் மணந்து 2024 இல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.






