search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிபொருள்"

    • விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது.
    • மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் உள் நாட்டு விமான சேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தற்போது விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.

    விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்வை சந்தித்து வருகிறது.

    இந்நிலையில் எரி பொருள் விலை உயர்வு காரணமாக முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்று முதல் விமான கட்டணத்தை ரூ.300 முதல் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த கட்டண உயர்வு முதல் 500 கிலோ மீட்டர் வரை ரூ.300 ,501 கி.மீ - 1000 கிலோமீட்டர் வரை ரூ.400, 1001- 1500 கி.மீட்டர் வரைரூ.550, 1501 -2500 கி.மீட்டர் வரை ரூ.650, 2501-3500 கி.மீட்டர் வரை ரூ.800, 3500 கிலோமீட்டருக்கு மேல் ரூ.1000 என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இண்டிகோ விமான நிறுவனத்தின் விமான டிக்கெட் கூடுதல் கட்டணம் உயர்வை முன்னிட்டு, மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • எரிபொருள் சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மத்திய பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தனியார் மினிபஸ் ஓட்டுநர்கள், பயிற்சி பள்ளி நிர்வாகிகள், ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை மத்திய பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எரிபொருள் சிக்கனம், சாலை பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு குறித்து பேசினார்.

    கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×