என் மலர்tooltip icon

    இந்தியா

    நவம்பர் 1 முதல் டெல்லியில் மீண்டும் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை
    X

    நவம்பர் 1 முதல் டெல்லியில் மீண்டும் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை

    • பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப டெல்லி அரசு தடை விதித்தது.
    • இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த முடிவை தற்காலிகமாக டெல்லி அரசு நிறுத்தி வைத்தது

    டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான மாநில அரசு ஜூலை 1 முதல் தடை விதித்தது.

    இதனால் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர்.

    டெல்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டெல்லி அரசு அறிவித்தது.

    இந்நிலையில், இந்தாண்டு நவம்பர் 1 முதல் மீண்டும் டெல்லியில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 1 வரை நிறுத்தி வைக்க காற்று தர மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்பிறகு பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதை தடை செய்யும் புதிய விதி அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×