என் மலர்
நீங்கள் தேடியது "ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்"
- 1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார்.
- அவருக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜி தான் அதிக மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து வருகிற 18-ந்தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகத்ராய். இவர் ராம்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தை சேர்ந்த விஜயேந்திர மகோத்தா மனைவி மற்றும் 5 குழந்தைகள் வீட்டுக்கு தீ வைத்து உயிரோடு எரித்துக்கொன்றார்.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஜகத் ராய் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவை தான் முதன் முதலாக ராம்நாத் கோவிந்த் பதவிக்கு வந்ததும் நிராகரித்தார்
இதன் தொடர்ச்சியாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை கடந்த 2020-ம் ஆண்டு நிராகரித்தார்.
2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஓடும் பஸ்சில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக முகேஷ்சிங், வினய் சர்மா, அக்ஷய்குமார் சிங், பவன்குப்தா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக இருந்த ராம்சிங் விரைவு கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது திகார் ஜெயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் ஒருவர் சிறார் என்பதால் சிறார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
மற்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் 4 பேரும் தனித்தனியாக ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த மனுக்களையும் 2020-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
இதேபோல கடைசியாக 2006-ம் ஆண்டு தூக்கு தண்டணை பெற்ற சஞ்சய் என்பவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
கடந்த 2012 முதல் 2017 வரை ஜனாதிபதியாக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி மொத்தம் 30 கருணை மனுக்களை நிராகரித்தார்.
1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜி தான் அதிக மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் 2 மனுக்களையும், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 5 கருணை மனுக்களையும் நிராகரித்து உள்ளனர்.
- கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் சோகமாகும்.
- துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
புதுடெல்லி:
கடலூர் அருகே ஏ.குச்சி பாளையத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்தனர்.
இந்த துயர சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில், 'தமிழகத்தில் கடலூர் அருகே ஆற்றில் உள்ள தடுப்பணையில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கும் சோகமாகும். இந்த சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பலியானவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
மோடி டுவிட்டரில் தமிழில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், ஏழு சிறுமியர் ஆற்றில் மூழ்கி உயிரிழத்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரண்டாவது நாளாக பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு சீனாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் உயிரிழந்த 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டது. வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில், சீன தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. பழனி சார்பில் அவரது மனைவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார்.
இதேபோல், சீன தாக்குதலில் உயிரிழந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
இதையும் படியுங்கள்.. மறைந்த சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்காளதேச பிரதமர் அப்துல் ஹமீதின் அழைப்பின் பேரில் டிசம்பர் மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் துருப்புக்களால் நடத்தப்பட்ட திடீர் ஒடுக்குமுறைக்குப் பிறகு , வங்காளதேசத்தின் விடுதலைப் போர் தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நாளை வங்காளதேசம் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக வங்காளதேசத்திற்கு பயணம் செய்கிறார்.
வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், இரண்டு மெகா நிகழ்வுகளை - மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் - முறையே டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 16 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன.
பாகிஸ்தானுடன் வங்காள தேசம் நடத்திய போரின் 50-வது வெற்றி தினம், நாடு உதயமான 50-வது ஆண்டு கொண்டாட்டம் ஆகியவை டாக்கா நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வங்காளதேசம் சென்று இந்த விழாக்களில் கலந்து கொள்கிறார். வங்கதேச தந்தை முஜிபூர் ரகுமானின் 100-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி சென்று வந்தார்.
அப்போது இரு நாட்டு தரப்பிலும் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தன. அதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டாக்கா செல்கிறார்.





