search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்றம்"

    • உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.
    • உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அந்த மசோதா வலியுறுத்துகிறது.

    நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்துள்ளார்.

    அவர் கொண்டுவந்துள்ள மசோதாவில், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் ஒரு முக்கியமான தனிநபர் மசோதாவை தான் பாராளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.

    உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியம் பரிந்துரைகளை அறிவிக்க மத்திய அரசுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவும் இந்த மசோதா முயற்சிசெய்கிறது.

    சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் செல்லும் தன்மையை நீதிபதிகள் திறம்பட தீர்மானிப்பதால், மாநில மற்றும் நாட்டின் சமூக பன்முகத்தன்மையை நீதிமன்ற அமர்வு பிரதிபலிக்கவேண்டியது கட்டாயமாகும் எனவும் இது ஒரு ஒரே மாதிரியான சமூக வர்கத்தினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

    அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரே துறை உயர் நீதித்துறை (உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்) மட்டுமே என்றும், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அந்த மசோதா வலியுறுத்துகிறது.

    • சவுதி அரேபியாவில் உள்ள ஜெயில்களில் 2,633 இந்திய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 266 பேர், இலங்கையில் உள்ள சிறைகளில் 98 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் எண்ணிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

    அதில் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 86 நாடுகளில் உள்ள சிறைகளில் 10,152 இந்தியர்கள் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனை பெற்ற கைதிகளாகவும் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சவுதி அரேபியாவில் உள்ள ஜெயில்களில் 2,633 இந்திய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சிறைகளில் 2,518 இந்திய கைதிகள் உள்ளனர்.

    நேபாளத்தில் உள்ள சிறைகளில் 1,317 இந்திய கைதிகள் உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் 266 இந்தியர்களும், இலங்கையில் உள்ள சிறைகளில் 98 இந்தியர்களும் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

    பிபா உலகக் கோப்பைக்குப் பிறகு கத்தார் சிறையில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கத்தார் சிறையில் 611 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். தனிமனித உரிமை சட்டம் காரணத்தினால் அவர்களின் சம்மதம் இல்லாமல் கத்தார் அரசு தரவுகளை வெளியிடுவதில்லை. இதனால் எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தரவுகள் கிடைக்கப்பெறவில்லை.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.

    டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும், மீனவர்களை மீட்க வலியுறுத்தியும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தயாநிதி மாறன், திருச்சி சிவா, ஆ.ராசா, கதிர் ஆனந்த், சு.வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், வைகோ, துரை வைகோ, சண்முகம், மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • 2014-ம் ஆண்டில் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தினர்.
    • தற்போது இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, அனைத்து செல்போன் நிறுவனங்களும் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி கட்டணத்தை உயர்த்தின. அது மத்திய அரசுக்கு தெரியுமா? இதனால் செல்போன் பயன்படுத்துவோருக்கு ரூ.34,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டண உயர்வை மத்திய அரசால் தடுக்க முடியாதா? என்றார்.

    அப்போது, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார். அவர் கூறியதாவது:

    செல்போன் கட்டணம் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 5ஜி சேவையை வேகமாக அறிமுகப்படுத்துவதற்கு போட்ட முதலீடே அதற்கு காரணம்.

    ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த முதலீட்டை திரும்ப எடுக்க வேண்டி இருக்கிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட 22 மாதங்களில் 98 சதவீத மாவட்டங்களில் 82 சதவீதம் பேரை சென்றடைந்துள்ளது.

    நம் நாட்டில் 2014-ல் 90 கோடி செல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். இன்று 116 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். கடந்த 2014ல் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தி வந்தனர். இன்று இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டில் ஒரு ஜிபி பிராட்பேண்ட் (வேகம்) இணையத்தின் விலை ஒரு ஜி.பி.க்கு ரூ.270 ஆக இருந்தது. இது தற்போது ஒரு ஜிபிக்கு ரூ.9.70 ஆக குறைந்துள்ளது.

    நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கட்டணங்களை கண்காணிப்பது அவசியம். போட்டியை ஊக்குவிக்கும் அரசின் கொள்கைகளே இந்தக் கட்டண குறைவுக்கு காரணம். இந்த குறைவு, குறிப்பாக கிராமப்புறங்களில் செல்போன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.

    தொலைதொடர்பு சேவைகள் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்து வருகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் அழைப்பு கட்டணமும், டேட்டா கட்டணமும் மலிவாக உள்ளது என தெரிவித்தார்.

    • நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியை டார்கெட் செய்கிறார்.
    • மாநிலங்களவையில் புதிய வரலாற்றை அளித்துள்ளார். அவை அனைத்தும் பொய்.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி "அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு. முழு கட்சியும் ஒரே குடும்பத்திற்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை முன்னிறுத்துவது மட்டுமே காங்கிரசின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சியில், அனைவரையும் திருப்திபடுத்த வேண்டி இருந்தது. இது தான் அவர்களின் அரசியல்பாதையாக இருந்தது.

    அம்பேத்கரை காங்கிரஸ் வெறுத்த காலம் உண்டு. அவருக்கு எதிராக சதி செய்தது. பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்குவது குறித்து அக்கட்சி பரிசீலனை செய்யவில்லை. அவருக்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தினால் தான், தற்போது காங்கிரஸ் ' ஜெய்பீம்' என்கிறது. காங்கிரஸ். 2 முறை தேர்தலில் அவரை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்தது. பிறரை பலவீனப்படுத்துவதே காங்கிரசின் வழக்கமாக உள்ளது. இதனால் தான் கூட்டணி கட்சிகள் கூட அக்கட்சியை விட்டு விலகிச் செல்கின்றன" என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் 90 நிமிட பேச்சில் நிதியில் நீர் வடிந்து ஓடுவதுபோல், வண்டி வண்டியால் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பிரதமர் மோடி இரண்டு ஆயுதங்களை கொண்டுள்ளார். ஒன்று பிரதான் மந்திரி காங்கிரஸ் பத்னாம் யோஜனா, மற்றொன்று பிரதமர் இதிஹாஸ் டோட்-மரோத் யோஜனா (Pradhan Mantri Congress Badnam Yojana' and 'PM Itihaas Tod-Marodh Yojana). அவர் நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியை டார்கெட் செய்கிறார். மாநிலங்களவையில் புதிய வரலாற்றை அளித்துள்ளார். அவை அனைத்தும் பொய்.

    சரியான முறையில் பிரதமர் மோடி பேசினால், நாங்கள் அதைப்பற்றி விவாதித்திருக்கலாம். ஆனால், அவர் பொய் பேசுகிறார். வரலாற்றுக்கு புதிய வடிவம் கொடுத்துள்ளார். இதுபற்றி என்ற சொல்ல முடியும்?.

    பிரதமர் பதவிக்கு நாங்கள் மதிப்பு கொடுக்கிறோம். ஆனால் தவறுதலாக கூட உண்மையை பேசத் தெரியாத ஒருவரை எப்படி மதிக்க முடியும்?

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கும்போது, அமெரிக்காவுக்கு சரியான பதில் அளிப்பார் என நம்பினோம்
    • இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் திருப்பி அனுப்பப்பட்ட விதம் நாட்டையே அவமானப்படுத்தியுள்ளது

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுப்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவை சேர்ந்த 104 பேரை அமெரிக்கா அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இந்தியா வந்தடைந்தவர்களில் பெரும்பாலானோர் குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    ராணுவ விமானத்தில் வரும்போது கை மற்றும் காலில் விலங்கு மாட்டி அழைத்து வரப்பட்டனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கண்ணியத்துடன் அமெரிக்கா நடத்தவில்லை. இது இந்தியாவுக்கு தலைக்குனிவு என விமர்சனம் எழுந்தது.

    இது தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது "இந்தியர்களை நாடு கடத்தும் செயல்முறை புதிது அல்ல. பல ஆண்டுகளாக உள்ளது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 2012-ல் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். 2012-ல் 530 பேர், 2019-ல் 2 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கை விலங்கு போடுவது அமெரிக்காவின் வழக்கம். சட்டப்படியே அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது. பெண்கள், குழந்தைகள் விலங்கிடப்படவில்லை. இந்தியர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்" என விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் ஜெய்சங்கர் விளக்கம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள். உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதில் அளித்துள்ளனர்.

    காங்கிரஸ் எம்.பி. ஷக்தி சின் கோஹில்

    பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கும்போது, அமெரிக்காவுக்கு சரியான பதில் அளிப்பார் என நம்பினோம். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. அவர்கள் ஏன் விலங்கு போட்டு அழைத்து வரப்பட்டார்கள்.

    இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை. வந்தவர்களில் 33 பேர் இந்தியாவின் மாடல் மாநிலம் எனக் கூறப்படும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மக்களை கண்ணியத்துடன் மீட்க நம்முடைய ராணுவ விமானம் ஏன் அனுப்பப்படவில்லை?.

    காங்கிரஸ் ரன்தீப் சுர்ஜிவாலா

    140 கோடி இந்தியர்களையும் மோடி அரசு இழிவு படுத்தியுள்ளது. 104 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து மனிதாபிமானமற்ற முறையில் திருப்பி அனுப்பப்பட்ட விதம் நாட்டையே அவமானப்படுத்தியுள்ளது. 7.25 லட்சம் இந்தியவர்களை அமெரிக்கா அவர்களில் நாட்டில் இருந்து நாடுகடத்த திட்டமிட்டுள்ளது அரசுக்கு தெரியுமா?. கைவிலங்கு மாட்டப்பட்ட நிலையில் இந்தியர்கள் ஏன் நாடு கடத்தப்பட்டனர்? போன்ற கேள்விகளை இந்திய அரசிடம் கேட்டோம்.

    ஆனால் அரசிடம் இருந்து பதில் இல்லை. அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதை பற்றியும், அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது பற்றியும், அவர்களுக்கு ஏன் தூதரக அணுகல் வழங்கவில்லை என்பது பற்றியும் கேள்வி எழுப்பினோம். கடந்த 75 ஆண்டுகளில் மிகவும் பலவினமான அரசு மோடி அரசுதான் என்பதுதான் உண்மை.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி

    பொதுவாக நாங்கள் வெளியுறவு விவகாரம் குறித்து நாங்கள் பேசுவதில்லை. ஆனால் கைவிலங்கு போட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது.

     இது மனித உரிமை மீறலாகும். இந்திய கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என நம்புகிறேன்.

    சிவசேனா (UBT) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி

    வாஷ்ரூம்-ஐ பயன்படுத்த முடியாத அளவிற்கு கை மற்றும் காலில் விலங்கு மாட்டி நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளி இல்லை என்பதை அமெரிக்காவுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். மனிதாபிமானமற்ற வகையில் அனுப்பியுள்ளனர். இதை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஒரு பக்கம் டொனால்டு டிரம்ப் தனது நண்பர் என பிரதமர் மோடி சொல்கிறார். மறுபக்கம் நம் நாட்டினர் இவ்வாறு நடத்தப்படுகின்றனர். தேசத்தின் கண்ணியத்திற்கும், மரியாதைக்கும் எதிரானது. நாம் இதற்கு சரியான எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை.

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

    அமெரிக்கா, அதன் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை சட்டப்பூர்வமாக வெளியேற்றுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

     ஆனால் அமெரிக்கா கண்ணியத்துடன் செய்திருக்கலாம். குறிப்பாக நட்டுபுடன் இருக்கும் நாட்டு மக்களை கண்ணியத்துடன் நாடு கடத்தியிருக்கலாம். டிப்ளோமேட்டிக் மூலமாக இந்திய அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கலாம்.

    • அனைவருக்குமான வளர்ச்சி என்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
    • தேசமே முதன்மை என்பதுதான் பாஜகவின் முன்னுரிமை. மக்கள் எங்கள் வளர்ச்சி மாடலை ஆதரித்துள்ளனர்.

    பாராளுமன்றத்தின் இரு அவைகளில் கூட்டுக் கூட்டத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்திற்காக பிப்ரவரி 3-ந்தேதி பாராளுமன்றம் கூடியது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மாநிலங்களவையில் இன்று மாலை பிரதமர் பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    * நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை சிறப்பாக அமைந்தது.

    * 'சப்கா சாத், சப்கா விகாஸ்' அனைவரின் பொறுப்பு. காங்கிரசிடமிருந்து 'சப்கா சாத், சப்கா விகாஸ்' எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறு. அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மேலும் அது அவர்களின் திட்டத்திற்கும் பொருந்தாது. ஏனெனில் முழு கட்சியும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    * அனைவருக்குமான வளர்ச்சி என்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    * குடும்பம்தான் முதன்மையான என்பது காங்கிரஸ் கட்சியின் முன்னுரிமை. அதனுடைய கொள்கைகள் குடும்பத்தை சுற்றியே இருக்கும்.

    * தேசமே முதன்மை என்பதுதான் பாஜக-வின் முன்னுரிமை. மக்கள் எங்கள் வளர்ச்சி மாடலை ஆதரித்துள்ளனர்.

    * காங்கிரஸ் மாடல் பொய், குடும்ப அரசியல், திருப்திப்படுத்தும் அரசியல், மோசடி கலந்தது.

    * தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி மாடல் திருப்பிப்படுத்தும் அரசியல் (appeasement- அரசியல் ஆதாயத்திற்காக ஒரு செயலை செயல்படுத்துதல்) அல்ல. மக்கள் அனைவரும் திருப்திப்படுத்தும் அரசியல் அல்ல.

    * தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக எஸ்.சி., எஸ்.டி. சட்டங்களை வலுப்படுத்தினோம்.

    * மக்களின் நலனுக்காக வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதே எங்கள் முயற்சி.

    * இன்று, சமூகத்தில் சாதி விஷத்தைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல ஆண்டுகளாக, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஓபிசி எம்.பி.க்கள் ஓபிசி குழுவிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து கேட்டு வந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் அது அவர்களின் (காங்கிரஸ்) அரசியலுக்குப் பொருந்தாமல் இருந்ததிருக்கலாம். ஆனால் நாங்கள் இந்தக் குழுவிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கினோம்.

    * 2014 க்குப் பிறகு, இந்தியா ஒரு மாற்று நிர்வாக மாடலை பெற்றது. இந்த மாடல் திருப்திப்படுத்தும் அரசியலில் (அரசியல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு ஒரு செயலை செய்தல்) கவனம் செலுத்தவில்லை. மாறாக மக்களை திருப்திப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

    * டாக்டர் சாகேப் அம்பேத்கர் மீது காங்கிரஸ் எவ்வளவு கோபத்தையும் வெறுப்பையும் கொண்டிருந்தது என்பது நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் பாபா சாகேப்பை பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவராக ஒருபோதும் கருதவில்லை. ஆனால் இன்று கட்டாயத்தின் காரணமாக 'ஜெய் பீம்' என்ற கோஷத்தை எழுப்ப வேண்டியிருக்கிறது.

    * புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எடுக்கப்பட்ட முதல் முடிவு பெண்கள் அதிகாரமளிப்பதை கௌரவிப்பதற்கானதாகும்.

    * எங்கள் அரசாங்கம் திறன் மேம்பாடு, நிதி உள்ளடக்கம் மற்றும் தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்தியது.

    * பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் மூலம் பாபாசாகேப் அம்பேத்கரின் கனவுகளை நாம் நனவாக்கி கொண்டிருக்கிறோம்.

    * என்னுடைய அரசு புதிய நடுத்தர வர்க்கத்தினருக்காக உறுதியாக நிற்கிறது. அவர்களின் திறன்களை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம்.

    * நடுத்தர வர்க்கத்தினர் அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர்; அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சக்தி அளிக்கும்.

    * நாங்கள் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

    * திறமையான விளையாட்டு வீரர்களை ஆதரிக்க, அரசு பல முனைகளில் பணியாற்றியுள்ளது; விளையாட்டு உள்கட்டமைப்புக்கு வலுவான நிதி ஆதரவை உறுதி செய்துள்ளது.

    * ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க எங்கள் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட பணிகள் இதற்கு முன் ஒருபோதும் செய்யப்படவில்லை.

    • இந்தியர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.

    அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக நேற்று 104 இந்தியர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது அவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டு இருந்தது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்புப் படை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இச்சம்பவம் இன்று பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிரொலித்தது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இந்தியர்களுக்கு கை விலங்கு என்ற புகாரை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்துள்ளது.

    இதற்கிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இந்தியர்களை நாடு கடத்தும் செயல்முறை புதிது அல்ல. பல ஆண்டுகளாக உள்ளது.

    * அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 2012-ல் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். 2012-ல் 530 பேர், 2019-ல் 2 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

    * கை விலங்கு போடுவது அமெரிக்காவின் வழக்கம். சட்டப்படியே அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது. பெண்கள், குழந்தைகள் விலங்கிடப்படவில்லை.

    * இந்தியர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

    * திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்.

    எனத் தெரிவித்தார்.

    • எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
    • பிரதமர் மோடியிடம் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக நேற்று 104 இந்தியர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது அவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டு இருந்தது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்புப் படை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இச்சம்பவம் இன்று பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் எதிரொலித்தது. இதனை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

    இதனிடையே, இந்தியர்களுக்கு கை விலங்கு என்ற புகாரை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்துள்ளது.

    இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

    அப்போது, இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • கார்கே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு வீழ்ச்சியடைந்தது குறித்து பேசினார்.
    • கார்கே பேசி கொண்டிருக்கும்போது பாஜக எம்.பி. நீரஜ் சேகர் குறுக்கிட்டார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் நேற்று கூடியது.

    அப்போது மாநிலங்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்தது குறித்து பேசினார்.

    கார்கே பேசி கொண்டிருக்கும்போது பாஜக எம்.பி. நீரஜ் சேகர் குறுக்கிட்டார். இதனால் கோபமடைந்த கார்கே,"நானும் உனது அப்பாவும் (சந்திர சேகர்) ஒரு காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். அப்போது உன்னை நான் ஒரு குழந்தையாக பார்த்தேன். இப்போது நீ என்ன பேசி கொண்டிருக்கிறாய். பேசாமல் அமைதியாக உட்காரு" என்று கோபத்துடன் பேசினார்.

    அப்போது இருவரையும் சமாதானப்படுத்த முயன்ற அவை தலைவர் ஜெகதீப் தன்கர், "சந்திர சேகர் இந்நாட்டின் உயர்ந்த தலைவர்களில் ஒருவர். அவருக்கு நாம் மரியாதையை செலுத்த வேண்டும். ஆகவே முன்னாள் பிரதமர் சந்திர சேகர் குறித்த உங்களது கருத்துக்களை திரும்ப பெறுங்கள்" என்று வலியுறுத்தினார்.

    அதற்கு பதில் அளித்த கார்கே, "நானும் சந்திர சேகரும் ஒருகாலத்தில் ஒன்றாக கைதானோம். அதனால் தான் அவரது அப்பாவை எனது தோழன் என்று குறிப்பிட்டேன். நான் யாரையும் இழிவுபடுத்த வேண்டுமென்று பேசவில்லை. பாஜக தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இழிவுபடுத்தினார்கள்." என்று தெரிவித்தார்.

    சமாஜ்வாதி கட்சியில் இருந்த நீரஜ் சேகர் 2019 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அவரது தந்தை சந்திர சேகர் 1990 அக்டோபர் முதல் 1991 ஜூன் வரை பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார்.
    • அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கில் சிக்கியது தி.மு.க. நபர் என்பதால் மாநில தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து கடந்த 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    அதைத்தொடர்ந்து இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார்.

    இந்நிலையில் மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை பேசுகையில்,

    அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கில் சிக்கியது தி.மு.க. நபர் என்பதால் மாநில தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியது போல், உண்மையை வெளிக்கொணர சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பேசினார்.

    • ஜன்தன் ஆதார் மொபைல் ஆகியவற்றின் மூலம் நேரடி மானியம் வழங்குவதை தொடங்கினோம்.
    • நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை 10 ஆண்டுகளில் நாம் அமைத்திருக்கிறோம்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடந்த விவாதம் நடைபெற்றது.

    அதன் முடிவில் இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசியல் லாப நஷ்டங்களை பற்றி கவலைப்படுபவர்கள் அல்ல நாங்கள்

    * ஏழைகளுக்கு சேவை செய்வது மட்டுமே மத்திய பாஜக அரசின் நோக்கம்

    * முன்பு பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை ஒரே ஒரு கட்சியின் ஆட்சி மட்டுமே இருந்தது

    * ஜன்தன் ஆதார் மொபைல் ஆகியவற்றின் மூலம் நேரடி மானியம் பட் வழங்குவதை தொடங்கினோம்.

    * நாட்டின் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை 10 ஆண்டுகளில் நாம் அமைத்திருக்கிறோம்.

    * AI என்ற வார்த்தை மிகவும் நாகரீகமாக மாறிவிட்ட இந்த நேரத்தில், இந்தியா இரட்டை AI இன் சக்தியை கொண்டுள்ளது.

    * முதல் AI என்பது செயற்கை நுண்ணறிவையும் இன்னொரு AI ஆஸ்பிரேஷனல் இந்தியாவை குறிக்கிறது" என்று தெரிவித்தார்.

    ×