என் மலர்

  செய்திகள்

  மு.க.ஸ்டாலின்
  X
  மு.க.ஸ்டாலின்

  12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சஸ்பெண்ட் நடவடிக்கை பாராளுமன்றத்தின் ஜனநாயக மாண்பை குறைக்கும் செயல் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
  சென்னை:

  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது இந்த கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  கண்டனம் தெரிவித்துள்ளார். சஸ்பெண்ட் நடவடிக்கை பாராளுமன்றத்தின் ஜனநாயக மாண்பை குறைக்கும் செயல் என்று கூறிய அவர், சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

  Next Story
  ×