என் மலர்

  நீங்கள் தேடியது "RamNath Kovind"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
  • ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார்.

  புதுடெல்லி:

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

  ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு நாளை பதவியேற்கிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
  • திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.

  புதுடெல்லி:

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது.

  இதையடுத்து, பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

  இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.

  திரவுபதி முர்மு வரும் திங்கட்கிழமை நாட்டின் 15ஆவது புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொள்கிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மகாராஷ்டிர முதல் மந்திரி, துணை முதல் மந்திரி ஆகியோர் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தனர்.
  • ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளனர்.

  புதுடெல்லி:

  மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்துப் பேசினர்.

  தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது மகாராஷ்டிராவின் தற்போதைய நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

  மேலும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்தித்தனர்.

  ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
  • குர்லாவில் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இடிபாடுகளில் இருந்து 2 புறாக்கள் உயிருடன் மீட்கப்பட்டன.

  புதுடெல்லி:

  மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது.

  தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

  இதற்கிடையே, குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  குர்லாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மேலும், 2 புறாக்களும் உயிருடன் மீட்கப்பட்டன.

  இந்நிலையில், மும்பை கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் நடைபெறும் ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
  புதுடெல்லி:

  மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 
  கடந்த 2019-ம் ஆண்டு 50-வது மாநாடு நடந்தது. அதன்பின், கொரோனா பரவலால் கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. 
  இந்தியாவில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் இந்த மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

  இந்நிலையில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் 4-வது மாநாடு இது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைநகர் டெல்லியில் நடந்த பத்ம விருது வழங்கும் விழாவில் 16 பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள்.
  புதுடெல்லி:

  கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

  இதற்கிடையே, 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. 

  இந்நிலையில், டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். 
  விருது பெற்றவர்களில் கங்கனா ரணாவத், அட்னான் சாமி, ஏக்தா கபூர், கரண் ஜோஹர் மற்றும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரும் அடங்குவர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் வென்றவர்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
  புதுடெல்லி:

  ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

  இதையடுத்து, 16வது மக்களவையை கலைக்கும் தீர்மானம் அமைச்சரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மக்களவையை கலைத்து உத்தரவிட்டார்.  இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வென்ற எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உச்ச நீதிமன்றத்திற்கு இன்று 4 புதிய நீதிபதிகளை ஜனாதிபதி நியமித்துள்ளார். இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.
  புதுடெல்லி:

  உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 31 நீதிபதிகள் பணியாற்றவேண்டும். இதில் 4 நீதிபதி இடங்கள் காலியாக இருந்தன. இதற்கு தகுதியான நீதிபதிகளை, தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு தேர்வு செய்து பரிந்துரை செய்தது.

  நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்படி, மத்திய அரசுக்கு கொலிஜியம் முதலில் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. அந்த நீதிபதிகளுக்கு போதிய சீனியாரிட்டி இல்லை என்று கூறி பரிந்துரையை மீண்டும் கொலிஜியத்துக்கே அனுப்பி வைத்தது. ஆனால், அவர்கள் பெயர்களையே மீண்டும் கொலிஜியம் பரிந்துரை செய்தது.  இதேபோல், நீதிபதிகள் பி.ஆர்.கவாய் (பூஷண் ராமகிருஷ்ண கவாய்), சூரியகாந்த் ஆகியோரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி பரிந்துரைத்தது.

  இந்த பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். நீதிபதிகள் அனிருத்தா போஸ், போபண்ணா, கவாய், சூரியகாந்த் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகள் பணியிடங்களும் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முப்படை வீரர்களின் துணிச்சலை போற்றும் வகையில் கீர்த்தி சக்ரா, ஷவுர்யா சக்ரா உள்ளிட்ட விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கி கவுரவித்தார். #RamnathKovind #GallantryAwards #ArmedForces
  புதுடெல்லி:

  இந்தியாவின் முப்படைகளை சேர்ந்தவர்களுக்கு துணிச்சல், தியாகத்தை வெளிப்படுத்தியதை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் அறிவிக்கப்பட்டு ஆண்டுக்கு இரு முறை இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

  இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கீர்த்தி சக்ரா உள்ளிட்ட விருதுகளை ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

  ராணுவத்தில் மிக உயரிய நிலையில், தனிச்சிறப்பான சேவை ஆற்றியதற்காக ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

  2018-ம் ஆண்டு மே மாதத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் 20 மீட்டர் தொலைவில் இருந்து 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய மேஜர் துசார் கவுபாவுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. மேலும், ராணுவ வீரர் ரஹ்மா பால் சிங், சிஆர்பிஎஃப் வீரர் ராஜேந்திர நைன் ஆகியோருக்கு இறப்புக்குப் பின் கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.

  ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் பிரிவைச் சேர்ந்த 12 பேருக்கு ஷவுர்யா சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.

  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் எல் கே அத்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #RamnathKovind #GallantryAwards #ArmedForces
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சபரிமலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர்கள் கேரள அரசு மீது பல்வேறு புகார்களை தெரிவித்தனர். #BJP #Sabarimala #RamnathKovind
  புதுடெல்லி:

  சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த எதிர்ப்பு மற்றும் போராட்டங்களையும் மீறி 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த 2-ந்தேதி சபரிமலையில் தரிசனம் செய்தனர்.

  இதை கண்டித்து மாநிலத்தில் முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக வன்முறை வெடித்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதா பிரமுகர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்த தொடர் வன்முறையால் மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

  இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக பா.ஜனதாவினர் நேற்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவர்கள், உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காணுமாறும் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டனர்.

  இது தொடர்பாக ஜனாதிபதியிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:-

  சபரிமலையில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தை கோர்ட்டு உத்தரவு என்ற பெயரில் மாநில அரசு அழித்து வருகிறது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதுடன், வழக்கமான பஜனை பாடுவதற்கு கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

  சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகளும், சபரிமலையை நிர்வகிக்கும் வாரியமும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. அந்த மனுக்களை விசாரித்து முடிக்கும்வரை கேரள அரசு காத்து இருந்திருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த மிகுந்த அவசரம் காட்டுகிறது.

  இதன் மூலம் இந்துக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தவும், அவர்களது மத நிறுவனங்களை அழித்து, அவர்களது உணர்வுகளை புண்படுத்தவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்ததையே காட்டுகிறது. அய்யப்ப பக்தர்கள், பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு குறிவைத்து இருக்கிறது.

  பிற மதத்தை சேர்ந்த பெண்கள் நுழைவதற்கு உதவுவதன் மூலம் சபரிமலையின் புனிதத்தை கெடுப்பதில் அரசும், உள்ளூர் போலீசாரும் இணைந்து சதி திட்டம் தீட்டியுள்ளனர். போலீசார் கூட, பெண்களுக்கு தங்கள் சீருடைகளை அணிவித்து சபரிமலைக்கு அழைத்து செல்கின்றனர். இது இந்துக்களுக்கு எதிராக சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் மிகவும் கீழ்த்தரமான செயல் ஆகும்.

  இவ்வாறு அந்த மனுவில் பா.ஜனதாவினர் குறிப்பிட்டு இருந்தனர்.

  ஜனாதிபதியை சந்தித்த குழுவில் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான சரோஜ் பாண்டே, மாநில பா.ஜனதா தலைவர் ஸ்ரீதரன் மற்றும் ஏராளமான எம்.பி.க்கள் இடம்பெற்று இருந்தனர். #BJP #Sabarimala #RamnathKovind 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வியட்நாம் வந்துள்ள இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமானது. #IndiaVietnam #IndiaVietnamties #KovindVietnamvisit
  ஹனோய்:

  இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  நேற்று தனது மனைவி சவிதா கோவிந்துடன் குவாங் நாம் நகருக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கும் பதின்மூன்றான் நூற்றாண்டுக்கும் இடையில் சம்பா வம்சத்தை சேர்ந்த மன்னர்களால் உருவாக்கப்பட்ட ‘மை சன்’ கோவில்களையும், கோபுரங்களையும் பார்த்தார்.  இந்நிலையில், தலைநகர் ஹனோயில் இன்று வியட்நாம் அதிபர் ப்ஹு டிராங்-கை அவர் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

  பாதுகாப்புத்துறை, ஆக்கப்பூர்வமான பயன்பாடுகளுக்காக அணுசக்தியை பயன்படுத்துவது, விண்வெளித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெட்ரோலிய கச்சா எண்ணைய், எரிவாயு, உள்கட்டமைப்பு துறை மேம்பாடு, வேளாண்மை மற்றும் புத்தாக்கம் தொடர்பான துறைகளில் இருநாடுகளும் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது.

  இருநாடுகளின் இறையாண்மையையும் மதிக்கும் வகையில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு இந்தியாவும், வியட்நாமும் இனி தொடர்ந்து இணைந்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு நாடுகளின் தலைவர்களும் இந்த சந்திப்பின் மூலம் உறுதிப்படுத்தினர்.

  இன்றைய பேச்சுவார்த்தையின்போது தலையெடுத்து வரும் பயங்ரவாதத்தை அனைத்து வகையிலும் எதிர்ப்பது எனவும் அவர்கள் உறுதியேற்றனர். வியட்நாம் அதிபருடனான இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பின்னர் ராம்நாத் கோவிந்த், குறிப்பிட்டார்.

  தொலைத்தொடர்பு, கல்வி, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கு இடையில் இன்று சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.

  வியட்நாம் ராணுவத்துக்கு தேவையான ஒத்துழைப்பை நல்கவும், வியட்நாம் கடலோர எல்லைப் பகுதியில் கண்காணிப்பை மேம்படுத்தவும் அதிவிரைவு படகுகளை தயாரிக்க இந்தியா 10 கோடி டாலர்கள் கடன் உதவி அளிக்கும் எனவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

  இந்தியா-வியட்நாம் நாடுகளுக்கு இடையிலான கடந்த ஆண்டு வர்த்தகம் 128 கோடி அமெரிக்க டாலர்களாக ஏறுமுகம் பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்த தொகை 150 கோடி டாலர்களாக உயரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். #IndiaVietnam #IndiaVietnamties #KovindVietnamvisit 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram