search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    மாநிலங்கள் உருவான நாள்: கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து

    மாநிலங்கள் உருவான நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாட்டின் பல பகுதிகள் மாகாணங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தன. பின்னர், 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி அன்று சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் உருவாகின. இதேபோல், வட இந்தியாவில் மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் ஒருங்கிணைந்த சமஸ்தானத்தில் இருந்து உதயமானது.

    இதனால், நவம்பர் 1-ம் தேதியை மாநிலங்கள் உருவான நாளாக, ஆண்டுதோறும் அந்தந்த மாநில அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டுவிட்டரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டிருப்பதாவது:-

    மொழிவாரியாக மாநிலங்களாக உருவான நாளன்று ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், அரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிப்பவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×