என் மலர்
நீங்கள் தேடியது "Security forces"
- தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) அன்று பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
இந்தச் சண்டையில், மாவட்ட ரிசர்வ் கார்டை சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றபட்டன.
- சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா 8 நாட்களுக்கு முன்பு ஹித்மாவின் தாயாருடன் மதிய உணவு சாப்பிட்டார்.
- மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே கொல்லப்பட்டனர்.
ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அல்லுரி சீதாராமராஜ் மாவட்ட காட்டுப்குதியில் மாவோயிஸ்டுகள் நேற்று காலை 6:30 மணி முதல் 7:00 மணி வரை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த நடவடிக்கையில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே மற்றும் நான்கு மாவோயிட்டுகள் கொல்லப்பட்டதாக ஆந்திரப் பிரதேச உளவுத்துறை கூடுதல் டிஜி மகேஷ் சந்திர லட்டா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த என்கவுண்டருக்கு 8 நாட்களுக்கு முன்பு நவம்பர் 10 அன்று, சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா மாவோயிஸ்ட் கோட்டையான சுக்மா மாவட்டத்தில் உள்ள பூவர்த்தி கிராமத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்றார்.
அங்கு, அவர் ஹித்மாவின் தாயாரைச் சந்தித்து அவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அவரது மகனை சரணடையச் செய்யுமாறு ஹித்மா தாயிடம் கேட்டுக் கொண்டார். மறுபுறம், ஹித்மாவின் நடமாட்டத்தை உளவுத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஹித்மா உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் ஆந்திராவிற்குள் நுழைந்து அங்கு இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்து வந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.
என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜி மகேஷ் சந்திர லட்டா தெரிவித்தார்.
- அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
- 2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான், "மாவோயிஸ்டுகள் இருப்பது குறித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் இதுவரை மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்" என்றார்.
2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளை அழிக்க 2026 மார்ச் மாதத்தை இலக்காக த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார்.
- பாகிஸ்தானில் தனித்தனியாக நடந்த தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது பஜவுர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
அதேபோல், தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த இரு தாக்குதலிலும் கொல்லப்பட்டது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.
- இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
- இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது.
இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இதையடுத்து ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இன்று (சனிக்கிழமை) ஆபரேஷன் அகாலின் ஒன்பதாவது நாள்.
இந்நிலையில் இன்று பயங்கரவாதிகள் உடனான சண்டையில் லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் மற்றும் சிப்பாய் ஹர்மிந்தர் சிங் என்ற 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
- காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
- பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) மோதல் ஏற்பட்டது.
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சத்ரூவின் குச்சல் பகுதியில் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அவர்களை பிடிக்க கூடுதல் படையினர் அனுப்பப்பட்டனர்.
முன்னதாக உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கர் பகுதியின் தொலைதூர பிஹாலி பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ஒரு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒரு வாரத்திற்கு முன் கொல்லப்பட்டார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சத்ரூ பகுதியில் நடந்த இரண்டு தனித்தனி மோதல்களில் மூன்று பயங்கரவாதிகளும் ஒரு வீரரும் கொல்லப்பட்டனர்.
- ஆறு குகி சிவில் சமூக அமைப்புகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்தன.
- அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் மூடப்பட்டன.
கடந்த வியாழக்கிழமை மத்திய பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இனப் பெண் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டவர் சுராசந்த்பூரின் லங்சிங்மன்பி கிராமத் தலைவரின் மனைவி ஹோய்கோல்ஹிங் என்று தெரிய வந்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினரின் அலட்சியத்தை கண்டித்து குகி பழங்குடியினர் தலைவர்கள் மன்றம் (ITLF) காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
ஆறு குகி சிவில் சமூக அமைப்புகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் காலவரையற்ற முழு அடைப்பால் நேற்று முதல் மணிப்பூரின் சுராசந்த்பூர் மற்றும் குகி பெரும்பான்மைப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் மூடப்பட்டன. மணிப்பூரில் 2023இல் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கிடையே வெடித்த இனக்கலவரம், மோதல்கள் தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலானது குறிப்பிடத்தக்கது.
- தளபதி ஹிட்மா மற்றும் பட்டாலியன் தலைவர் தேவா உள்ளிட்ட உயர் நக்சல் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்து அறிந்தனர்.
- இப்பகுதியில் ஏராளமான IED வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட நக்சல்களைச் சுற்றி வளைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட இந்த நடவடிக்கையில் இதுவரை குறைந்தது 5 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சலிசத்தை ஒழிக்க மார்ச் 31, 2026 வரை காலக்கெடு நிர்ணயித்த நிலையில், இந்த மிகப்பெரிய நடவடிக்கையில் பாதுகாப்புப் படை இறங்கியுள்ளது.
சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள கர்ரேகுட்டா மலைகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, நக்சல்கள் தப்பிக்கும் அனைத்து வழிகளையும் துண்டித்துள்ளனர்.
தலைமறைவான மற்றும் மிகவும் தேடப்படும் தளபதி ஹிட்மா மற்றும் பட்டாலியன் தலைவர் தேவா உள்ளிட்ட உயர் நக்சல் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுக் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
அடர்ந்த காடுகள் மற்றும் தொடர் மலைகளால் சூழப்பட்ட இந்தப் பகுதி, மாவோயிஸ்டுகளின் பட்டாலியன் எண் 1 இன் தளமாகக் கருதப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, நக்சல்கள் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு, மலைப்பகுதிகளுக்குள் நுழைய வேண்டாம் என்று கிராம மக்களை எச்சரித்தனர். மேலும் இப்பகுதியில் ஏராளமான IED வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர் என்று கூறப்படுகிறது.
- தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது.
- பலுச் விடுதலை படை நடத்திய ரெயில் கடத்தலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு கூறியிருந்தது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் ரெயிலை கடத்திய பிரிவினைவாத பலுச் விடுதலை படை, நேற்று பாதுகாப்புப் படையினர் சென்ற ராணுவ வாகனத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பரபரப்பூட்டும் வீடியோவை பலுச் விடுதலை படை தற்போது வெளியிட்டுள்ளது.

நேற்று காலையில் நோஷிகி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் வாகனங்களில் சென்றபோது, கான்வாயில் புகுந்த ஒரு வாகனம் திடீரென வெடித்தது. தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது. 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பலுச் விடுதலை படை நடத்திய ரெயில் கடத்தலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு கூறியிருந்தது.
கடந்த வாரம் இதே மாகாணத்தில், பலுச் விடுதலை படையினர், கூடலார் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகே 440 பயணிகளை ஏற்றி சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தி பயணிகளை சிறைபிடித்தனர்.
அதில் பெரும்பாலானோர் பாதுகாப்பு ஊழியர்கள் ஆவர். மறுநாள் ராணுவம் நடத்திய மீட்பு நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகளையும் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு, 21 பயணிகளையும் நான்கு துணை ராணுவ வீரர்களையும் பயங்கரவாதிகள் கொன்றனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
- ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் சுரால்கோட் சித்தார்க் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் இறந்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினார்கள். சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- எல்லைக்கோடு அருகே குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
- ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று (ஜூலை 18) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
தொடர்ந்து நடந்த நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு வாரத்திற்குள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் கெரான் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் என்கவுன்டர் தொடங்கியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் மேற்கொண்டு தகவல்கள் இனி வெளிவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.
- தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பீஜப்பூர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள்.
மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 153 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.






