என் மலர்
நீங்கள் தேடியது "KUPWARA"
- ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல்.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு.
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் ஜெய்சல்மேர் பகுதியில் இடைமறித்து தாக்கி அழித்தது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அக்னூர், கிஸ்த்வார் மற்றும் பல பகுதிகளில் Blacout எனும் மின்சார தடை ஏற்பட்டு இருளில் மூழ்கப்பட்டுள்ளது. டிரோன் தாக்குதலுக்கான சைரன் ஒலித்து கொண்டே இருக்கிறது.
டிரோன் தாக்குதலுக்கிடையே, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாராமுல்லா மாவட்டங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் (LoC) பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். எல்லையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
- ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் கடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
- குப்வாரா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து மறைவிடத்தை ராணுவம் அழித்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.
இந்தியா சிந்தி நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்கோட்டருகே பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்க எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடும் வேட்டையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாதிகள் மறைவிடத்தை தாக்கி அழித்து வருகின்றன.
அதனடிப்படையில் குப்வாரா மாவட்டத்தில் செடோரி நலா என்ற காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடும் இருப்பதாக புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தது. புலனாய்வுத்துறை அளித்த தகவலின்படி மச்சில் முகாம் சிறப்பு செயல்பாட்டுக்குழு (SOG), இந்திய ராணுவத்தின் 12ஆவது சிக்லி (SIKHLI) குழுவுடன் இணைந்து பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்து அழித்தது. மேலும், மறைவிடத்தில் இருந்து ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை கைப்பற்றினர்.
- எல்லைக்கோடு அருகே குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
- ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று (ஜூலை 18) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
தொடர்ந்து நடந்த நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒரு வாரத்திற்குள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.
வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் கெரான் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் என்கவுன்டர் தொடங்கியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் மேற்கொண்டு தகவல்கள் இனி வெளிவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் இயக்கத்துக்காக இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயிற்சி அளித்து பயங்கரவாத இயக்கத்துடன் இணைத்துக் கொள்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாவட்டம் குப்வாரா மாவட்டத்தில் இருந்து 4 பேரை அல்-பத்ர் இயக்கத்தில் இணைத்து, அவர்களை 3 பயங்கரவாதிகள் அழைத்து செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டுப்பகுதி வழியாக வந்த பயங்கரவாதிகள், புதிதாக இணைந்த 4 பேரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர். மேலும், பலத்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த 4 பேர் பாதுகாப்பு படையிடம் சரணடைந்தனர்.
மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகள் தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MilitantsSurrender
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை அடியோடு களைவதற்கு பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் முகாம்களை கண்டறிந்து அழித்தல், அவர்களின் ஊடுருவலை தடுத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் அம்மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மிகவும் தீவிரமாக நடைபெற்ற இந்த மோதலில், பயங்கரவாதிகளில் 2 பேர் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநில டி.ஜி.பி தெரிவித்துள்ளார். #JammuKashmir #MilitantGunnedDown
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து அந்த வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி யார் என்பது குறித்தும், எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்பது குறித்தும் தகவல் ஏதும் இல்லை. #Jammukashmir #militantgunneddown
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலும், பாகிஸ்தான் படையினரின் தாக்குதலும் அத்துமீறி நடந்துகொண்டு இருக்கிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள கெரன் எல்லைப்பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் ஊடுருவலை தடுக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிசூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கிசூட்டில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளில் 6 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும், எத்தனை பேர் ஊடுருவ முயற்சி செய்துள்ளனர் என்பது குறித்தும், அங்கிருந்து தப்பி சென்ற பயங்கரவாதிகள் குறித்தும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #militantsgunneddown
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹந்த்வாரா பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள காசியாபாத் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பயங்கரவாதிகள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர். அதைத்தொடர்ந்து தப்பியோடியவர்களை பிடிப்பதற்காக அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தப்பியோடிய பயங்கரவாதிகள் 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், மீதமுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #militantstkilled






