என் மலர்

  நீங்கள் தேடியது "baramulla"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். #civiliansinjured #Pakfiring #LoCfiring
  ஸ்ரீநகர்:

  போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளின்மீது அத்துமீறலாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

  இந்நிலையில், பாரமுல்லா மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருபெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #civiliansinjured #Pakfiring #LoCfiring 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் பாராமுல்லா ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட இரு என்கவுண்டர்களில் பாதுகாப்பு படையினர் 6 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். #JammuKashmir #Encounter
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அர்வானி பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட்னர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர்.

  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பயங்கரவாதிகள்  சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடவடிக்கையை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  இதேபோல், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் உள்ள கீரி என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலான இந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #Encounter
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JammuKashmir #TerroristsGunnedDown
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் உள்ள கீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

  அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட துவங்கினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் கடுமையான பதிலடி கொடுத்தனர்.

  சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலான இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #TerroristsGunnedDown
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை வழியாக அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் இன்று மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்க பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த சோதனையின் போது நேற்று வரை 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் வீர மரணம் அடைந்தார்.

  இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் 3 நாட்களில் 7 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்துகொண்டு இருக்கிறது. #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். #TerroristKilled #Shopian #Baramulla
  ஸ்ரீநகர் :

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம், ரபியாபாத் எனும் இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  அப்போது ஒரு வீட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்தவரான சவர் விஜய் குமார் எனும் அதிகாரி உயிரிழந்தார்.

  இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

  சோபியான் மாவட்டம், கிலூரா எனும் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய மற்றொறு தேடுதல் வேட்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளான். இதனால் மாநிலத்தின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TerroristKilled #Shopian #Baramulla
  ×