ஜம்மு காஷ்மீர் - பாராமுல்லாவில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் - பாராமுல்லாவில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபுர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினரை கண்டதும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர்.

இதையடுத்து, பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். ஆனாலும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com