ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

அனந்த்நாக் சண்டைக்குப்பின் பயங்கரவாதிகளை தேடும்பணி தீவிரம்உயிரிழந்த பயங்கரவாதி யார்? என்பது குறித்து அடையாளம் காணப்படவில்லை
ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக வீரர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயர் அதிகாரிகள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டம் ஹர்லாங்காவில் உள்ள உரி பகுதியில் ராணுவ வீரர்கள் பாரமுல்லா போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி யார்? எந்த அமைப்பைச் சேர்ந்தவர்? என்பது குறித்து அடையாம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com