என் மலர்
நீங்கள் தேடியது "பாராமுல்லா"
- ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல்.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு.
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் ஜெய்சல்மேர் பகுதியில் இடைமறித்து தாக்கி அழித்தது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அக்னூர், கிஸ்த்வார் மற்றும் பல பகுதிகளில் Blacout எனும் மின்சார தடை ஏற்பட்டு இருளில் மூழ்கப்பட்டுள்ளது. டிரோன் தாக்குதலுக்கான சைரன் ஒலித்து கொண்டே இருக்கிறது.
டிரோன் தாக்குதலுக்கிடையே, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாராமுல்லா மாவட்டங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் (LoC) பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். எல்லையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்க பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் போது நேற்று வரை 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் வீர மரணம் அடைந்தார்.
இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் 3 நாட்களில் 7 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்துகொண்டு இருக்கிறது. #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled






