என் மலர்
நீங்கள் தேடியது "pakistan troops"
- பாகிஸ்தான் ஃபட்டா பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல்.
- பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சரமாரி தாக்குதல் நடத்தியது. கடந்த 7ஆம் தேதி 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் 26 தாக்குதல் நடத்தி 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. இந்த நிலையில் 7ஆம்தேதி இரவு பாகிஸ்தான் இந்தியா எல்லையில் அத்துமீறி தாக்கதல் நடத்தியது. அத்துடன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. நேற்று முன்தினமும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த இந்தியா, தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் நேற்று உச்சகக்ட்டமாக பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிகளை குறிவைத்து டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அத்துடன் டெல்லியை நோக்கி பாலிஸ்டிக் ஏவகணையான ஃபட்டா-2 மூலம் தாக்குதல் நடத்தியது. இது அதிவேக ஏவுகணை ஆகும். 400 கி.மீ. தூரத்தை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும். இதை இந்தியா வானில் இடைமறித்து அழித்தது.
நேற்று வழிபாட்டு தலங்கள், மருத்துவ கட்டமைப்புகள், ராணுவ தளங்கள், பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதால் நடத்த முயற்சித்தது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் மென்மேலும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில்தான் பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லை நோக்கி நகர்த்தி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஒருவேளை தரைவழி தாக்குதலுக்கு தயாராகிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் பிரதமர் மோடி பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஒருவேளை பாகிஸ்தான் தாக்குதலை அதிகரித்தால் தற்போதுள்ள அறிவிக்கப்படாத போர், அதிகாரிப்பூர்வமாக போர் அறிவிப்பாக மாறலாம்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல்.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு.
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் ஜெய்சல்மேர் பகுதியில் இடைமறித்து தாக்கி அழித்தது. பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து அக்னூர், கிஸ்த்வார் மற்றும் பல பகுதிகளில் Blacout எனும் மின்சார தடை ஏற்பட்டு இருளில் மூழ்கப்பட்டுள்ளது. டிரோன் தாக்குதலுக்கான சைரன் ஒலித்து கொண்டே இருக்கிறது.
டிரோன் தாக்குதலுக்கிடையே, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாராமுல்லா மாவட்டங்களில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் (LoC) பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனால் எல்லையில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். எல்லையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 700 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.
இவ்வாறு வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் மீண்டும் முன்னறிவிக்கப்படாத துப்பாக்கி சூடு தாக்குதலை நேற்றிரவு 10.30 மணியளவில் நடத்தியுள்ளனர். சிறிய ரக ஆயுதங்களை கொண்டு ராம்கார் பிரிவில் நாராயணபூர் பகுதியில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படையினரின் முகாம்கள் மற்றும் கிராமங்கள் இலக்கிற்கு உள்ளாகின.
இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை கட்டுப்படுத்த பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது. இதில் சேதவிவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.
இதேபோல் ஆர்னியா செக்டாரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் பாகிஸ்தான் படையினர் தாக்குதலைத் தொடங்கினர். 3 இந்திய நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதலாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டையில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. #JKFiring #CeasefireCiolation #PakistanTroops #PleadForCeasefire







