search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ceasefire violation"

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir
    ஸ்ரீநகர்:

    புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான்  ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.



    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளத்தாக்கு பகுதியை ஒட்டியுள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம்  இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் 7 மணிக்கு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எனினும், எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி பாகிஸ்தான் படையினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். #CeasefireViolation
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் மற்றும் காதி கர்மா பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    அவர்கள் துப்பாக்கிகளால் சுமார் 30 முதல் 40 ரவுண்டுகள் வரை சுட்டனர். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த காயமும் 
    ஏற்படவில்லை என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது  
    குறிப்பிடத்தக்கது. #CeasefireViolation
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்தனர். 

    இந்நிலையில், அம்மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    அப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், இந்த தாக்குதலில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 
    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று அடிக்கடி கூறும் பாகிஸ்தானை நம்பவே முடியாது என்பதை இன்றைய துப்பாக்கிச் சூடு நிரூபித்துள்ளதாக எல்லைப் பாதுக்காப்பு படை ஐ.ஜி. குறிப்பிட்டுள்ளார். #PakCeasefireviolation
    ஜம்மு:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    இந்நிலையில், எல்லைப்பகுதி துப்பாக்கிச் சூட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இருநாடுகளை சேர்ந்த ராணுவ செயல்பாட்டு பிரிவு டைரக்டர் ஜெனரல்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சில முடிவுகள் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர். 

    பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்பாக ஜம்மு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய எல்லைப் பாதுக்காப்பு படையின் ஜம்மு பகுதி ஐ.ஜி. ராம் அவ்தார், ‘போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று அடிக்கடி கூறும் பாகிஸ்தானை நம்பவே முடியாது என்பதை இன்றைய துப்பாக்கிச் சூடு நிரூபித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

    இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு நிச்சயமாக போர் நிறுத்த மீறலாகும். இதற்கு நாமும் தக்க பதிலடி கொடுத்துள்ளோம். இதில் எதிர்தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என்பதை யூகிக்க இயலவில்லை. எனினும், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை பாதிக்காத வகையில் இன்றைய பதில் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். #PakCeasefireviolation 
    ×