என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்"

    • தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என சத்குரு கூறியுள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்தத் தாக்குதல் குறித்து சத்குரு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல, ஆனால் ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது, பீதியைப் பரப்புவதும், சமூகத்தைப் பிளவுபடுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடம் புரளச் செய்வதும், ஒவ்வொரு மட்டத்திலும் சட்டமின்மையை உருவாக்குவதும் தான் அதன் நோக்கமாகும்.

    நம் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கவும், வளர்க்கவும் விரும்பினால், பயங்கரவாதத்தை இரும்புக் கரத்துடன், உறுதியான நீண்டகால தீர்மானத்துடனும் கையாள வேண்டும்.

    கல்வி, பொருளாதாரம், சமூக நலன் என அனைத்து மட்டங்களிலும் அனைவருக்கும் சம பங்கீடு வழங்குவது நீண்ட கால தீர்வை கொடுக்கும்.

    ஆனால், இப்போதைக்கு, மதம், சாதி, அல்லது அரசியல் தொடர்புகள் ஆகியவற்றின் அனைத்து குறுகிய பிளவுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றாக நிற்பதும், நமது பாதுகாப்புப் படைகளுக்கு அவர்களின் கடமைகளைச் செய்ய அனைத்து மட்டங்களிலும் ஆதரவளிப்பதும் மிகவும் முக்கியமானது.

    இங்கு தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்.

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் மீது சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். #MilitantsAttack #JKfiring #SPOshot

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தின் கத்தோ ஹலன் பகுதியில் இன்று மாலை சிறப்பு போலீஸ் அதிகாரி ரவீஸ் அகமது மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்சிபோரா காவல் நிலையம் மீது சில பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #MilitantsAttack #JKfiring #SPOshot
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்தனர். 

    இந்நிலையில், அம்மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    அப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், இந்த தாக்குதலில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 
    ×