search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "militant attack"

    ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலையடுத்து லாட்ஜுகளில் போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினர். #MilitantAttack
    ராமநாதபுரம்:

    இலங்கையில் அடுத் தடுத்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்து 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியான சம்பவம், உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் எதிரொலியாக இந்தியாவின் கடலோர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக இலங்கை -இந்திய கடல்பகுதி தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுகளில் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்கள், ரெயில் நிலையங்கள், பயணிகள் ரெயில்கள் போன்றவற்றை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், பெங்களூரு காவல் துறை திடீர் எச்சரிக்கை வெளியிட்டது.

    இது தொடர்பாக தமிழக காவல்துறைக்கு பெங்களூரு மாநகர காவல்துறை கடிதமும் அனுப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    முக்கிய இடங்களில் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரத்தில் மத இயக்கங்களை கண்காணிக்கும் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் சந்தேகத்திற் கிடமான வகையில் யாரும் தங்கி உள்ளார்களா? என்பது தொடர்பாகவும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மாவட்டம் முழுவதும் இரவு முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. கடலோரப்பகுதிகளில் கடலோர காவல் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    சந்தேகத்திற்கிடமான வகையில் யாராவது சுற்றித்திரிந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #MilitantAttack
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்துவார் மாவட்டத்தில் இன்று பிரபல ஆர் எஸ் எஸ் தலைவர் மற்றும் மெய்க்காப்பாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #Kishtwar #MilitantsAttack
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தவர் சந்திரகாந்த் சர்மா. இவர் தனது மெய்க்காப்பாளருடன்  கிஷ்த்துவார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற பயங்கரவாதி ஒருவன் சந்திரகாந்த் சர்மா, அவரது மெய்க்காப்பாளரை நோக்கி சரமாரியாக சுட்டான்



    இந்த திடீர் தாக்குதலில் சர்மாவின் மெய்க்காப்பாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த சந்திரகாந்த் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதைத்தொடர்ந்து, கிஷ்த்துவார் மற்றும் பதெர்வா நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இண்டர்நெட்டுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளோம். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Kishtwar #MilitantsAttack
    காஷ்மீரில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. #ParliamentaryElection
    ஜம்மு:

    பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் இருக்கும் அவர்களது பயங்கரவாத முகாம்களை 1000 கிலோ குண்டுகளை வீசி அழித்தது.

    இந்தியாவின் அதிரடி தாக்குதலால் ஆத்திரம் அடைந்துள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் கைவரிசை காட்ட அவர்கள் முயற்சிகளில் ஈடுபட இருப்பதாக உளவு துறை எச்சரித்துள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனந்தநாக் தொகுதியில் ஏப்ரல் 23-ந்தேதியும், குல்காம் தொகுதியில் ஏப்ரல் 29, புல்வாமா, சோபியா தொகுதிகளில் மே 6, பாராமுல்லா தொகுதியில் ஏப்ரல் 11, ஸ்ரீநகரில் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.



    ஓட்டுப்பதிவு நடக்கும் நாட்களில் ஏதாவது ஒரு பகுதியில் மிகப்பெரிய தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக யஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளும் உதவி செய்வதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவல்களை உளவுத்துறை தெரிவித்து எச்சரித்துள்ளது.

    இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு நாட்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #ParliamentaryElection
    பாகிஸ்தானின் கைபர் பகதுங்வா மாகாணத்தில் இன்று போலீசார் ரோந்து வாகனத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். #policemenkilled #militantattack #DeraIsmailKhanattack
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்வா மாகாணத்துக்குட்பட்ட டேரா இஸ்மாயில் கான் மாவட்டம், பேஹ்ரோ பகுதியில் இன்று போலீசார் ரோந்து வாகனத்தின்மீது புதர்களில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

    இதில் 4 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆய்வாளர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். #policemenkilled #militantattack #DeraIsmailKhanattack
    ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு பலரை சிறைபிடித்த பயங்கரவாதிகளுக்கும், அதிரடி படைக்கும் நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Afghanistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் அகதிகள் நலவாழ்வு இயக்குனரகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வெளிநாட்டில் இருந்து நிதி அளிப்பவர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் அலுவலகத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இதனை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும்போது, அலுவலகத்தினுள் நுழைந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் உட்பட பலரை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர்.


    இதையடுத்து அவர்களை மீட்க அதிரடி படையினர் முயற்சித்தனர். இந்த முயற்சியில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.

    மேலும், அலுவலகத்தினுள் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கி இருக்கின்றன்றனரா என்பது குறித்து வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் முழுவதும் நீடித்த இந்த மோதல் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. #Afghanistan
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படை வாகனம் மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். #JammuKashmir #SecurityForce #MilitantAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பட்மலூ பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பாதுகாப்பு படை வாகனங்களை வழிமறைத்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.



    பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரது உயிர் வரும்வழியிலேயே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #SecurityForce #MilitantAttack
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தேசிய மாநாடு கட்சி தலைவர் வீட்டின் மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலுக்கு நின்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். #policemankilled #militantattack #NationalConferenceleader
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குலாம் மொஹிதின் என்பவரின் வீடு புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட முரான் சவுக் அருகேயுள்ள ராஜ்போரா பகுதியில் உள்ளது.

    இவரது வீட்டின்மீது இன்று அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியதுடன் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் பறித்துச் சென்றனர். இந்த தாக்குதலில் அங்கு காவலுக்கு நின்றிருந்த இரு போலீசார் படுகாயமடைந்தனர்.

    உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒருவரான முடாடிர் அஹமது என்பவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிருக்கு போராடிய மற்றொரு போலீஸ்காரரான நசிர் அஹமது மேல்சிகிச்சைக்காக ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்துக்கு பின்னர் அப்பகுதியை முற்றுகையிட்டுள்ள போலீசார் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். #policemankilled  #militantattack #NationalConferenceleader
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் மீது சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். #MilitantsAttack #JKfiring #SPOshot

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தின் கத்தோ ஹலன் பகுதியில் இன்று மாலை சிறப்பு போலீஸ் அதிகாரி ரவீஸ் அகமது மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்சிபோரா காவல் நிலையம் மீது சில பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #MilitantsAttack #JKfiring #SPOshot
    ×