search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுப்பதிவு நாளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை
    X

    ஓட்டுப்பதிவு நாளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை

    காஷ்மீரில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. #ParliamentaryElection
    ஜம்மு:

    பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் இருக்கும் அவர்களது பயங்கரவாத முகாம்களை 1000 கிலோ குண்டுகளை வீசி அழித்தது.

    இந்தியாவின் அதிரடி தாக்குதலால் ஆத்திரம் அடைந்துள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்தல் சமயத்தில் கைவரிசை காட்ட அவர்கள் முயற்சிகளில் ஈடுபட இருப்பதாக உளவு துறை எச்சரித்துள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனந்தநாக் தொகுதியில் ஏப்ரல் 23-ந்தேதியும், குல்காம் தொகுதியில் ஏப்ரல் 29, புல்வாமா, சோபியா தொகுதிகளில் மே 6, பாராமுல்லா தொகுதியில் ஏப்ரல் 11, ஸ்ரீநகரில் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.



    ஓட்டுப்பதிவு நடக்கும் நாட்களில் ஏதாவது ஒரு பகுதியில் மிகப்பெரிய தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக யஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளும் உதவி செய்வதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவல்களை உளவுத்துறை தெரிவித்து எச்சரித்துள்ளது.

    இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு நாட்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #ParliamentaryElection
    Next Story
    ×