என் மலர்
நீங்கள் தேடியது "Poonch"
- ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை நிறுத்த முடியாது. அல்லது தொய்வடைய செய்ய முடியாது.
- 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வளர்ச்சிக்கான பணி, மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி மக்கள் வசிக்கும் இடங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைப் பகுதிகள் மீது கடும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சென்றார்.
பூஞ்ச் சென்ற அமித் ஷா கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியை நிறுத்த முடியாது. அல்லது தொய்வடைய செய்ய முடியாது. 2014ஆம் ஆண்டு தொடங்கியது தொடரும். யாராவது எங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்தால், வலுவான மற்றும் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் ஒட்டுமொத்த நாடும் மலை போன்று ஆதரவாக நிற்கிறது.
பயங்கரவாதிகளும் பாகிஸ்தானும் செய்யும் செயல்கள் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையை வலுப்படுத்தும். பிரதமர் மோடி பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாது. பயங்கரவாதம், வர்த்தகம் ஒன்றாக பயணிக்க முடியாது. ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வளர்ச்சிக்கான பணி, மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும். சுதந்திரத்திற்குப் பிறகு பூஞ்ச் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் பாகிஸ்தான் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியது. இந்த ஆத்திரமூட்டலுக்குப் பிறகுதான், நமது படைகள் வலிமையுடனும் துல்லியமாகவும் பதிலளித்தன.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
- பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லையில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
- பாகிஸ்தால் அத்துமீறி இந்திய எல்லையில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி, ஸ்ரீநகர் பகுதிகளில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. Mortar குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி சந்தித்தார். பூஞ்ச் பகுதியில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது "நடந்த பெரிய துயரம். மக்களின் அவலங்களை தேசிய அளவிற்கு எடுத்துச் செல்வேன்" என உறுதியளித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத தாக்குதல் போன்று எல்லையில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை பெரிய துயரச் செயல் என ராகுல் காந்தி கூறியதாக பாஜக கடும் விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில் "ராகுல் காந்தி பூஞ்ச் பகுதியில் நடந்ததை, துயரம் எனத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பாகிஸ்தான் ராணுவத்தால் பயங்கரவாத தாக்குதல் நடத்தியது போல் நடத்திய தாக்குதலை, துயரச் செயல் என்பதுபோல் சொல்கிறார்.
பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத மனநிலையுடன் குண்டு மழைகளை பொழிந்தது. ஆயுதம் இல்லாத அப்பாவி மக்களை கொன்றது. குருத்வாரா மற்றும் பூஜையில் ஈடுபட்ட பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.
ராகுல் காந்தி பயங்கரவாத செயலை துயரச் செயல் என்பதுபோல் பூசி மறைப்பதில் ஈடுபடுகிறார். எங்களுடைய காயத்தில் உப்பை தேய்த்துவிட்டீர்கள். காங்கிரஸ் தலைவர் சோகத்தின் பெயரில் நகைச்சுவை செய்வதை நிறுத்த வேண்டும்.
ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தினரும் எப்போதும் பாகிஸ்தானின் பயங்கரவாதம், பாகிஸ்தானின் தவறான செயல்கள் மற்றும் பாகிஸ்தானின் குற்றச்செயல்கள் மறைப்புக்கான தாக்குதல்களை வழங்குகிறார்கள். இவை அனைத்தும் தற்செயலானவை அல்ல. பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நேரடி ஒத்துழைப்பு.
- ஆபரேஷன் சிந்தூரை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
- பூஞ்ச், ரஜோரி பகுதிகள் பாகிஸ்தான் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. அதனைத் தொடர்ந்து இந்தியா ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையை 7ஆம் தேதி நள்ளிரவு மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மதியம் வரை இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் வாழும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. அத்துடன் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதலை இந்தியா முறியத்ததுடன், கடுமையான பதிலடி கொடுத்தது.
குறிப்பாக 7ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஒரு ராணுவ வீரர், 4 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், பூஞ்ச், ரஜோரி பகுதிகளில் உள்ள வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.
இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது. குழு வருகிற 21 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறது.
இந்த குழுவில் தெரிக் ஓ'பிரையன், சகாரியா கோஸ், முகமது நதிமுல் ஹக் ஆகிய எம்.பி.க்கள் மற்றும் மேற்கு வங்க மாநில அமைச்சர் மனாஸ் புனியா, முன்னாள் எம்.பி. மமதாக தாகூர் இந்த குழுவில் இடம் பிடித்துள்ளனர்.
மம்தா பானர்ஜியின் வழிகாட்டுதலின்படி ஐந்து பேர் கொண்ட குழு ஸ்ரீநகர், பூஞ்ச், ரஜோரி செல்லும் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
- இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்.
- பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தின. 26 முறை துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் முகாம்கள் அழிக்கப்பட்டு முக்கிய பயங்கரவாதிகள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குறைந்த 12 பேர் உயிரிழந்தனர். 57-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா மீது பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஷிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுக்பீர் சிங் பாதல் தனது எக்ஸ் பக்க பதிவில் "பூஞ்சில் உள்ள புனித மத்திய குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா சாஹிப் மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் அப்பாவியான பாய் அமிரிக் சிங் ஜி, பாய் அமர்ஜீத் சிங், பாய் ரஞ்சித் சிங் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்
தியாகிகளின் தியாகத்திற்காக அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு அவர்களின் துயர நேரத்தில் ஆதரவளிக்க போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.
சீக்கியர்கள் எப்போதும் நாட்டின் வாள் கரமாக இருந்து வருகின்றனர், தொடர்ந்து இருப்பார்கள். நாங்கள் எங்கள் ஆயுதப் படைகளுடன் ஒரு பாறை போல நிற்கிறோம். சிரோமணி அகாலி தளமும் நமது நாடும் அமைதிக்காக நிற்கின்றன என்றாலும், எதிரியால் நமது கவுவரத்திற்கு சவால் விடுக்கப்பட்டால், நமது தேசபக்தி கடமைகளை நிறைவேற்ற நமக்கு எந்த நினைவூட்டலும் தேவையில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.
- இன்று காலை கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதில் 4 வீரர்கள் வீரமரணம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜோரியில் தேரா கி காலி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 வீரர்கள் மரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மூன்று பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளை தேடும்பணி நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் இதேபோன்று ராஜோரியில் நடைபெற்ற பயங்கர சண்டையில் இரண்டு கேப்டன்கள் உள்பட ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
- பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைில் இந்திய பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ரகசிய தகவல் அடிப்படையில் தீவிரவாதிகள் மறைந்திருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி செல்லும்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தும்போது, வீரர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் பூஞ்ச் உள்ளிட்ட பல பகுதியில் அடிக்கடி வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
நேற்று பூஞ்ச், ரஜோரி பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதனால் அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் இடத்தை வீரர்கள் நெருங்கிய நிலையில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இருந்தபோதிலும் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் பூஞ்ச் ரஜோரியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-
நேற்று பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல். அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய வீரர்களின் தியாகத்தை வைத்து நீங்கள் (பா.ஜனதா) மீண்டும் அரசியல் செய்ய விரும்புகிறீர்களா?. 2024-ல் மீண்டும் புல்வாமா விவகாரத்தை வைத்து வாக்கு கேட்க விரும்புகிறீர்களா?.
பூஞ்ச் தாக்குதல் குறித்து நாங்கள் கேள்வி கேட்டால், அதன்பின் அவர்கள் எங்களை டெல்லி அல்லது நாட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் கடந்த பத்து நாட்களாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் குல்பூர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டதாக இந்திய ராணுவ உயரதிகாரி குறிப்பிட்டார்.
மேலும், ஜம்மு மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை நமது எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். #LoC #ceasefire #PoonchLoC
காஷ்மீர் மாநில சர்வதேச கட்டுப்பாட்டு கோடு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 23-ந் தேதி பூஞ்ச் மற்றும் ஜாலியஸ் பகுதியில் இந்திய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மேலும், பீரங்கி குண்டுகளையும் வீசினார்கள்.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய வீரர்கள் நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள அவர்களின் ராணுவ தலைமையகம் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை உறுதிப்படுத்திய அந்த பகுதியில் உள்ள கிராமவாசிகள் கடும் புகை எழுந்ததாக தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கிராம மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தவில்லை எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பாந்தா சவுக் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் வழக்கம்போல் ரோந்து சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் ராணுவ வீரர்களை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் நமது ராணுவ வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர்.






