என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுக்பீர் சிங் பாதல்"

    • இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்.
    • பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய முப்படைகள் தாக்குதல் நடத்தின. 26 முறை துல்லியமாக நடத்தப்பட்ட தாக்குதலில் முகாம்கள் அழிக்கப்பட்டு முக்கிய பயங்கரவாதிகள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டனர்.

    இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குறைந்த 12 பேர் உயிரிழந்தனர். 57-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குருத்வாரா மீது பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஷிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுக்பீர் சிங் பாதல் தனது எக்ஸ் பக்க பதிவில் "பூஞ்சில் உள்ள புனித மத்திய குருத்வாரா ஸ்ரீ குரு சிங் சபா சாஹிப் மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் அப்பாவியான பாய் அமிரிக் சிங் ஜி, பாய் அமர்ஜீத் சிங், பாய் ரஞ்சித் சிங் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்

    தியாகிகளின் தியாகத்திற்காக அவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும், துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பங்களுக்கு அவர்களின் துயர நேரத்தில் ஆதரவளிக்க போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.

    சீக்கியர்கள் எப்போதும் நாட்டின் வாள் கரமாக இருந்து வருகின்றனர், தொடர்ந்து இருப்பார்கள். நாங்கள் எங்கள் ஆயுதப் படைகளுடன் ஒரு பாறை போல நிற்கிறோம். சிரோமணி அகாலி தளமும் நமது நாடும் அமைதிக்காக நிற்கின்றன என்றாலும், எதிரியால் நமது கவுவரத்திற்கு சவால் விடுக்கப்பட்டால், நமது தேசபக்தி கடமைகளை நிறைவேற்ற நமக்கு எந்த நினைவூட்டலும் தேவையில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • பகவத் மான்-க்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை.
    • அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது நாங்கள் கவலையாக உணர்கிறோம்.

    சிரோமணி அகாலி தளம் தலைவர் பஞ்சாப் முதல்வர் பகவத் மான்-ஐ கடுமையாக விமர்சனம் செய்தார். பகவத் மான் குறித்து சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது:-

    பகவத் மான்-ஐ நான் சீக்கியராக கருதவில்லை. அவர் அணிந்துள்ள தலைப்பாகை அவரை சீக்கியராக காட்டுகிறது. அவருக்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை. அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது எங்கங்கு கவலையாக உள்ளது.

    இந்தியாவில் 18 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒற்றுமையாக இல்லாததால் அவர்களுக்கு என தலைவர் இல்லை. நாம் இரண்டு சதவீதம்தான் உள்ளோம். என்றபோதிலும் நாம் ஸ்ரீ அகால் தக்த் சாகிப் கீழ் ஒன்றிணைந்துள்ளோம்.

    அவர்கள் (ஆம் ஆத்மி) பஞ்சாபை சுரண்டி கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான் கிடையாது.

     சீக்கியர்களை கொண்ட அனைத்து மாநிலங்களிலும் சிரோமணி அகாலி தளம் அமைப்புகளை தொடங்கும்.

    இவ்வாறு சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆணடு பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கட்சிகள் படுதோல்வியடைந்தன. 117 இடங்களை கொண்டு பஞ்சாபில் 92 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    • சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் விலகியுள்ளார்.
    • புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும்.

    சண்டிகர்:

    சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சுக்பீர் சிங் பாதல் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் செயற்குழுவிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

    இதுதொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர் தல்ஜித் சிங் சீமா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் விலகியுள்ளார். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும். தனது தலைமைமீது இதுவரை நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக சுக்பீர் சிங் பாதல் கூறினார் என பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2007 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலை மதரீதியாக குற்றமிழைத்தவர் என்றும், அகால் தக்த் அமைப்பின் ஜாதேதார் என அழைக்கப்படும் ஜியானி ரக்பீர் சிங் அறிவித்தார்.

    அகால் தக்த் என்பது சீக்கியர்களின் மிக உயரிய அரசியல் அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவர் ஜாதேதார் என அழைக்கப் படுகிறார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, அகால் தக்த் அமைப்பு சுக்பீர் சிங் பாதலை மதரீதியாக குற்றமிழைத்தவர் என அறிவித்த நிலையில், அவருக்கான மதரீதியான தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் சுக்பீர் சிங் பாதல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் தண்டனை வழங்கியது
    • பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டிருந்தார்

    பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை ஆட்சி செய்த சிரோமணி அகாலி தள அரசு செய்த குற்றங்களுக்காக சீக்கிய குருமார்கள் அடங்கிய அகால் தக்த் பீடம் அக்கட்சியினருக்கு மத முறைப்படி தன்கா [tankhah] தண்டனையை வழங்கியது.

    2015 ஆம் ஆண்டு பஞ்சாப் துணை முதல்வராக இருந்தபோது சிரோமணி அகாலி தல முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுக்பீர் சிங் பாதல்,  சீக்கியர்களுக்கும் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களைத் தூண்டிய வழக்கில் ராம் ரஹீமுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சுக்பீர் சிங் பாதல் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி அகால்தக்த் அவருக்கு இந்த  தண்டனையை விதித்துள்ளது. 

    இதன்படி  அம்ரிஸ்தரில் பொற்கோவிலில் சேவாதார் ஆக சேவை செய்ய முடிவானது. நேற்று முன் தினம் முதல் இந்த தண்டனையை ஏற்று சுக்பீர் சிங் பாதல் சேவத்தார் நீல நிற உடையுடன் பொற்கோவில் வாசலில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கழுதில் தண்டனை தட்டை தொங்கவிட்டுக்கொண்டு கையில் ஈட்டியோடு கோவிலுக்கு காவல் இருந்து மத தண்டனையை நிறைவேற்ற தொடங்கினார்.

     

    அவருடன் ஆதரவாளர்களும் உடன் இருந்தனர். அகாலிதளத்தின் மூத்த தலைவரும், பாதலின் மைத்துனருமான பிக்ரம் சிங் மஜிதியா, பொற்கோவிலில் பாத்திரங்களைக் கழுவித் தனது தண்டனையை நிறைவேற்றி வந்தார்.

    இந்நிலையில் பொற்கோவில் வாசலில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் பாதல் மீது இன்று [ புதன்கிழமை] காலை திடீர் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சுக்பீர் சிங் அருகே நெருங்கிய நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டார். ஆனால் அருகில் இருந்த ஆதரவாளர் ஓடிச்சென்று அந்த நபரின் கையை தட்டி விட்டதால் சுக்பீர் சிங் உயிர்பிழைத்தார்.

    சுற்றியிருந்த மக்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கிச்சூடு நடந்திய நபர் நரேன் சிங் சௌரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பபர் கால்ஸா இன்டர்நேஷனல் (BKI) என்ற பயங்கரவாத அமைப்போடு தொடர்புடையவர் என்று தெரியவந்துள்ளது. 

     

    ×