search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "head quarters"

    டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைவர்கள் மீது ஷூ வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #BJP #Manhurlsshoes
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையகம் அமைந்துள்ளது. இதில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு இன்று ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

    இதில் பாஜக தலைவர்களான பூபேந்திர யாதவ் மற்றும் ஜி வி எல் நரசிம்ம ராவ் ஆகியோர் பேட்டியளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென ஒருவர், பாஜக தலைவர்கள் மீது ஷுவை கழற்றி வீசினார். இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த அதிகாரிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #BJP #Manhurlsshoes
    புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு இன்று கைப்பற்றியது. #Jaishheadquarters #Pakgovttakescontrol
    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் மீது எந்த நடவடிக்கை எடுக்காததுடன், இந்தியா மீதான தாக்குதல்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணத்தை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்க தவறிய பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாண அரசு இன்று கைப்பற்றியது.

    லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹவல்பூர் என்னும் பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் மாகாண அரசு கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி பவாத் சவுத்ரி இன்று இரவு தெரிவித்துள்ளார். #Jaishheadquarters #Pakgovttakescontrol
    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நிகழ்த்திய தாக்குதலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். #India #Pakistan #Poonch
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநில சர்வதேச கட்டுப்பாட்டு கோடு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 23-ந் தேதி பூஞ்ச் மற்றும் ஜாலியஸ் பகுதியில் இந்திய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மேலும், பீரங்கி குண்டுகளையும் வீசினார்கள்.



    இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய வீரர்கள் நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள அவர்களின் ராணுவ தலைமையகம் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை உறுதிப்படுத்திய அந்த பகுதியில் உள்ள கிராமவாசிகள் கடும் புகை எழுந்ததாக தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கிராம மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தவில்லை எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள பாந்தா சவுக் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் வழக்கம்போல் ரோந்து சென்றனர். அப்போது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் ராணுவ வீரர்களை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் நமது ராணுவ வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். 
    ×