பூஞ்ச் பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை: 4 ராணுவ வீரர்கள் பலி

ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.இன்று காலை கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதில் 4 வீரர்கள் வீரமரணம்.
பூஞ்ச் பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை: 4 ராணுவ வீரர்கள் பலி
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், ரஜோரியில் தேரா கி காலி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 வீரர்கள் மரணம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மூன்று பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாதிகளை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் இதேபோன்று ராஜோரியில் நடைபெற்ற பயங்கர சண்டையில் இரண்டு கேப்டன்கள் உள்பட ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com