search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjay Raut"

    • மக்களவை தேர்தலில் நாசிக் தொகுதியில் போட்டியிட விரும்பினார்.
    • மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். இரண்டு கிடைக்காததால் அதிருப்பு எனத் தகவல்.

    நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

    இந்த கூட்டணிக்கு நினைத்ததுபோல் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அஜித் பவார் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.-க்கள் சரத் பவார் கட்சிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே அஜித் பவார் கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் சகான் புஜ்பால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்த நடைபெற்ற வருவதாக தகவல் வெளியானது.

    ஆனால் உத்தவ் தாக்கரே கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், அப்படி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில் "சகான் புஜ்வால்- சிவசேனா (யுபிடி) இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக வந்த செய்தியில் ஒரு துளி கூட உண்மையில்லை. பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை" என்றார்.

    ஒன்றாக இருந்த சிவ சேனா கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் புஜ்பால். இவர் சிவசேனாவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்பின் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றிய போது அவருடன் சென்றார்.

    மாநிலங்களவை எம்.பி. கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அஜித் பவார் தன் மனைவியை நிறுத்தியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே நாசிக் தொகுதியில் போட்டியிட விரும்பியபோது அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    • பாராளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது.
    • இதனால் துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்றார் பட்னாவிஸ்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்று துணை முதல் மந்திரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என தேவேந்திர பட்னாவிஸ் நேற்று தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தில் வெற்றி கிடைக்காமல் போனது குறித்து ஆலோசிக்க அம்மாநில துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு பா.ஜ.க. மேலிடம் இன்று அழைப்பு விடுத்துள்ளது.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி எம்பியான சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மகாராஷ்டிரா அரசியலில் வில்லன் என்றால் அது தேவேந்திர பட்னாவிஸ் தான். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்ததற்கு தேவேந்திர பட்னாவிஸ்தான் காரணம்.

    பட்னாவிஸ் பல குடும்பங்களை அழித்துள்ளார் மற்றும் அரசியல் பழிவாங்கலை நாடியுள்ளார்.

    மோடி வலுக்கட்டாயமாக ஆட்சி அமைக்க முயன்றால் அது நீடிக்காது என என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

    மோடிக்கு கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு மாற்று வழி தேடும் முயற்சியில் சங்கத்தின் உயர்மட்ட தலைமை செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
    • இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    மும்பை:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டு போராட்டத்தை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கெஜ்ரிவால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில கைது செய்யலாம் என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில், சிவசேனா எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆம் ஆத்மியின் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். ஜூன் 4-ம் தேதி ஆட்சி மாறப்போகிறது. இன்றும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவது டெல்லியில் மட்டுமல்ல, மும்பையிலும் நடக்கிறது என தெரிவித்தார்.

    • தற்போது முடிந்துள்ள இரு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது.
    • ஜூன் 4 -ம் தேதி அன்று இந்தியா கூட்டணி 300 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேரணியின்போது பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வருடத்திற்கு ஒரு பிரதமர் என 5 பிரதமர்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே, பிரதமரின் கருத்துக்கு சிவசேனாவின் சஞ்சய் ராவத் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அவர்கள் ஒரு வருடத்தில் 2 அல்லது 4 பிரதமர்களை கூட உருவாக்குவார்கள். ஆனால் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல விடமாட்டோம்.

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சி சிறந்தது. யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது எங்கள் விருப்பம்.

    தற்போது முடிந்துள்ள இரு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது.

    வரும் ஜூன் 4 -ம் தேதி அன்று இந்தியா கூட்டணி 300 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    • கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
    • முன்னாள் பிரதமர்கள் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அரசியல், கலை, இலக்கியம் என தங்கள் துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பீகாரைச் சேர்ந்த கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. கடந்த 4-ம் தேதி பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், கட்சி தலைவரான பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதேபோல், மகா நிர்மாண் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரேவும் பாலா சாகேப் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    • மகாராஷ்டிரா அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது.
    • எனவே பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிரா வருகிறார் என்றார் சஞ்சய் ராவத்.

    மும்பை:

    உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிராவுக்கு வருகிறார். அவர் மகாராஷ்டிராவை அவ்வளவு நேசிக்கிறார் என்பதால் அல்ல.

    உத்தர பிரதேசத்திற்கு பிரதமர் செல்வது உ.பி.யை நேசிப்பதால் அல்ல. உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தொகுதிகள் அதிகம். அதற்குப் பிறகு மகாராஷ்டிரா. வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா முக்கியப் பங்கு வகிக்கும்.

    இங்குள்ள அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது.

    கடந்த 13 மாதங்களில் 8 முதல் 10 முறை இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஏன் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார்.

    • விரைவில் கடவுள் ராமரை தங்கள் வேட்பாளராக பா.ஜ.க.வினர் அறிவிப்பார்கள்.
    • ராமர் பெயரில் பெரிய அரசியல் நடத்தப்படுகிறது என சஞ்சய் ராவத் காட்டமாக விமர்சித்தார்.

    மும்பை:

    சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பான கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், இப்போது தேர்தலுக்கு ராமரை தங்கள் வேட்பாளராக மட்டும்தான் பா.ஜ.க. அறிவிக்கவில்லை. விரைவில் அவரை தங்கள் வேட்பாளராகவும் அறிவிப்பார்கள். ராமர் பெயரில் இவ்வளவு பெரிய அரசியல் நடத்தப்படுகிறது என காட்டமாக விமர்சனம் செய்தார்.

    இந்நிலையில், ஷிண்டே பிரிவைச் சேர்ந்த சிவசேனா தலைவர் கிருபாள் துமானே கூறுகையில், வெட்கமின்மைக்கும் ஒரு எல்லை உண்டு. தற்போது ராவணன் மடியில் அமர்ந்திருப்பதால் பா.ஜ.க. மீது வெறுப்பு கொண்ட அவர் இப்போது ராமரையும் வெறுக்க ஆரம்பித்து விட்டார். இந்திய மக்கள் இதைப் பொறுக்க மாட்டார்கள் என ஆவேசத்துடன் தெரிவித்தார்.

    • பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைில் இந்திய பாதுகாப்புப்படையினர் உள்ளூர் போலீசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். ரகசிய தகவல் அடிப்படையில் தீவிரவாதிகள் மறைந்திருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி செல்லும்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தும்போது, வீரர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதனால் பூஞ்ச் உள்ளிட்ட பல பகுதியில் அடிக்கடி வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

    நேற்று பூஞ்ச், ரஜோரி பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை பயங்கரவாதிகள் மறைந்திருக்கும் இடத்தை வீரர்கள் நெருங்கிய நிலையில், பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இருந்தபோதிலும் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் ஐந்து வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் பூஞ்ச் ரஜோரியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    நேற்று பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல். அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய வீரர்களின் தியாகத்தை வைத்து நீங்கள் (பா.ஜனதா) மீண்டும் அரசியல் செய்ய விரும்புகிறீர்களா?. 2024-ல் மீண்டும் புல்வாமா விவகாரத்தை வைத்து வாக்கு கேட்க விரும்புகிறீர்களா?.

    பூஞ்ச் தாக்குதல் குறித்து நாங்கள் கேள்வி கேட்டால், அதன்பின் அவர்கள் எங்களை டெல்லி அல்லது நாட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதாவை ஜெயிக்க வைத்தால், ராமர் கோவிலில் இலவச தரிசனம்.
    • தோற்றகடிக்கப்பட்டால் மத்திய பிரதேச மக்கள் சாமி தரிசனம் செய்ய மறுக்கப்படுவார்களா?.

    சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியை சேர்ந்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறியதாவது:-

    அமித் ஷா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் மத்திய பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைத்தால் மத்திய பிரதேச மக்கள் ராமர் கோவிலில் இலவசமாக தரிசனம் பெறலாம் எனக் கூறியதாக கேட்டறிந்தேன். மேலும், அறிக்கைகளை படித்தேன்.

    கடவுள் ராமர் ஒட்டுமொத்த இந்தியா, உலகத்திற்குரியவர். மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா தோல்வியடைந்தால், அதன்பின் அங்குள்ள மக்கள் சாமி தரிசனம் செய்ய மறுக்கப்படுவார்கள் என்று அர்த்தமாகுமா?. நம் நாட்டில் என்ன விதமான அரசியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோத்தி ராமர் கோவில் 2024, ஜனவரி 22-ம் தேதி அன்று திறக்கப்படுகிறது.
    • ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

    மும்பை:

    உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் 2.7 ஏக்கரில், 57,400 சதுர அடியில் ரூ.2000 கோடி மதிப்பில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி அன்று நண்பகல் 12.30 மணிக்கு அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். கும்பாபிஷேக நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார். இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா அமைப்பு அழைப்பிதழை வழங்கியது.

    இந்நிலையில், ராமர் கோவிலுக்குச் சென்று பிரதமர் மோடி பூஜை செய்வது என்பது தேர்தலுக்கான தயாரிப்பாக இருக்கலாம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. சஞ்சய் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பிரதமர் இவ்வளவு பெரிய நிகழ்வை ஏன் விடப்போகிறார்? பிரதமரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் தானே செல்வார்.

    ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர்.

    சிவசேனா, பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அனைத்து இந்துத்துவ அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும் இதில் ஈடுபட்டன.

    எல்.கே.அத்வானி ரத யாத்திரை நடத்தினார். அதன் விளைவாகவே ராமர் கோவில் கட்டப்படுகிறது.

    பிரதமர் மோடி அங்கு சென்று பூஜை செய்வது வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பாக இருக்கலாம் என தெரிவித்தார்.

    • கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள்.
    • ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெற்றிடுவார்.

    தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில கட்சிகளான பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். உள்ளிட்டவைகளை விமர்சித்து பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை சேர்ந்த அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்," என்று தெரிவித்தார்.

    அசாதுதீன் ஒவைசி கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், "ராகுல் காந்தியின் அரசியல் உயரம் பலமடங்கு அதிகரித்துவிட்டது. தேர்தல் களத்தில் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவர் வெற்றி பெற்றிடுவார். மேலும் ஒவைசி தன்னை உண்மையான தேசபக்தர் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அவர் ராகுல் காந்தியை தவிர்த்துவிட்டு அமித் ஷா மற்றும் நரேந்திர மோடிக்குத் தான் சவால் விட வேண்டும்," என்று தெரிவித்து உள்ளார்.

    • கடந்த 4-ம் தேதி ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைத்தது.
    • ராகுல் காந்திக்கு மத்திய அரசு பயப்படுகிறது என சஞ்சய் ராவத் கூறினார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    இதற்கிடையே, கடந்த 4-ம் தேதி ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது.

    இதையடுத்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து எம்.பி. பதவியை உடனடியாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேகம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு அதை ரத்து செய்வதில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்து 3 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் சபாநாயகர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை ரத்து செய்யவில்லை. மத்திய அரசு ராகுல் காந்திக்கு பயப்படுகிறது. எனவே அவரின் தகுதி நீக்கத்தை ரத்துசெய்து எம்.பி. பதவியை வழங்காமல் உள்ளது என தெரிவித்தார்.

    ×