என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்துத்துவாவை கைவிட்ட பிறகு நரகத்தில் விழுந்தார்கள்: உத்தவ் தாக்கரே கட்சியினரை கிண்டல் செய்த ஏக்நாத் ஷிண்டே
    X

    இந்துத்துவாவை கைவிட்ட பிறகு நரகத்தில் விழுந்தார்கள்: உத்தவ் தாக்கரே கட்சியினரை கிண்டல் செய்த ஏக்நாத் ஷிண்டே

    • பாலாசாகேப் தாக்கரே இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தார்.
    • பாலாசாகேப் தாக்கரேயின் மரபிலிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார்கள்.

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத். இவரின் நரகத்தில் சொர்க்கம் (Narkatla Swarg) என்ற புத்தகத்தை அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று வெளியிடுகிறார்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரே கட்சியை கிண்டல் செய்யும் வகையில் சிவசேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, இந்துத்துவாவை கைவிட்ட பிறகு நரகத்தில் விழுந்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "அவர்கள் {சிவசேனா (UBT)} பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருந்திருந்தால், நரகத்தில் விழுந்து இன்று சொர்க்கத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

    பாலாசாகேப் தாக்கரே இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியாக வேரூன்றியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். குஜராத் மற்றும் தேசத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பணியை பாலாசாகேப் அங்கீகரித்தார்.

    தற்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்து, பாலாசாகேப்பின் கொள்கைகளைக் கைவிட்ட நபர்கள் (உத்தவ் தாக்கரேவின் பெயரைக் குறிப்பிடாமல்), அவரது முடிவுகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் ({சிவசேனா (UBT)}) பாலாசாகேப் தாக்கரேயின் மரபிலிருந்து வெகு தொலைவில் விலகிச் சென்றுவிட்டார்கள்." எனத் தெரிவித்தார்.

    சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே, பாஜக-வுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநில முதல்வரானார். பின்னர் சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து கைப்பற்றினார். இதனால் உத்தவ் தாக்கரே சிவசேனா (UBT) என்ற கட்சியை தொடங்கினார்.

    நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வியடைந்தது.

    Next Story
    ×