என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறப்பு அமர்வுக்காக டிரம்பிடம் அனுமதி பெறவேண்டுமா?: பிரதமரை சாடிய சஞ்சய் ராவத்
    X

    சிறப்பு அமர்வுக்காக டிரம்பிடம் அனுமதி பெறவேண்டுமா?: பிரதமரை சாடிய சஞ்சய் ராவத்

    • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.
    • அவர்கள் தனித்தனியாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    புதுடெல்லி:

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர். அதன்பின், அவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி.யான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமருக்கு நாங்கள் எழுதிய கடிதத்தில் 16 அரசியல் கட்சிகளின் கையொப்பங்கள் உள்ளன.

    இது ஒரு சாதாரண கடிதம் அல்ல. எதிர்க்கட்சி என்பது பொதுமக்களின் குரல்.

    நாட்டில் இதுவரை என்ன நடந்தது என்பது குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    ஜனாதிபதி டிரம்பின் ஆலோசனையின் பேரில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தால், எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்த பிறகும் ஏன் ஒரு சிறப்பு அமர்வை நடத்த முடியாது?

    ஒரு சிறப்பு அமர்வுக்காக அதிபர் டிரம்பிடம் நாம் செல்ல வேண்டுமா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×