என் மலர்
இந்தியா

மும்பை மேயர் தேர்தல்: வேறு கணக்குப் போடும் உத்தவ் தாக்கரே கட்சி
- பாஜக கூட்டணி 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
- உத்தவ் தாக்கரே கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் 28 மாநகராட்சிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. ஆண்டிற்கு 74 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் மும்பை மாநகராட்சியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
227 கவுன்சிலர் வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சியில் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா 29 இடங்களை பிடித்துள்ளது. மெஜாரிட்டிக்கு 114 தேவை. ஆனால் பாஜக கூட்டணி 118 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் பாஜக மேயர் பதவியை கைப்பற்றும் என எதிபார்க்கப்படுகிறது.
அதேவேளையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (UBT) 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சிவ சேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் எங்களுக்கு 6 இடங்கள்தான் குறைவு. காத்திருந்து பாருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-
தற்போது சிவ சேனா (UBT)- 65, மகாராஷ்டிலா நவநிர்மன் சேனா- 6, காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள்- 24, ஏஐஎம்ஐஎம்- 8, சமாஜ்வாடி-2, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ்-3, சரத் பவார் கட்சி-1 என எங்களுக்கு 108 இடங்கள் உள்ளன. இலக்கு 114. எங்களுக்கு இன்னும் 6 இடங்கள்தான் குறைவு. காத்திருந்து பாருங்கள். மும்பை அரசியலில் எதுவும் நடக்கலாம்.
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.






