என் மலர்
இந்தியா

காயம் மீது உப்பை தேய்க்கும் பாகிஸ்தான் பிரசார தலைவர் ராகுல் காந்தி: பாஜக கடும் விமர்சனம்
- பாகிஸ்தான் அத்துமீறி இந்திய எல்லையில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
- பாகிஸ்தால் அத்துமீறி இந்திய எல்லையில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி, ஸ்ரீநகர் பகுதிகளில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. Mortar குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி சந்தித்தார். பூஞ்ச் பகுதியில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது "நடந்த பெரிய துயரம். மக்களின் அவலங்களை தேசிய அளவிற்கு எடுத்துச் செல்வேன்" என உறுதியளித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத தாக்குதல் போன்று எல்லையில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை பெரிய துயரச் செயல் என ராகுல் காந்தி கூறியதாக பாஜக கடும் விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில் "ராகுல் காந்தி பூஞ்ச் பகுதியில் நடந்ததை, துயரம் எனத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பாகிஸ்தான் ராணுவத்தால் பயங்கரவாத தாக்குதல் நடத்தியது போல் நடத்திய தாக்குதலை, துயரச் செயல் என்பதுபோல் சொல்கிறார்.
பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத மனநிலையுடன் குண்டு மழைகளை பொழிந்தது. ஆயுதம் இல்லாத அப்பாவி மக்களை கொன்றது. குருத்வாரா மற்றும் பூஜையில் ஈடுபட்ட பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது.
ராகுல் காந்தி பயங்கரவாத செயலை துயரச் செயல் என்பதுபோல் பூசி மறைப்பதில் ஈடுபடுகிறார். எங்களுடைய காயத்தில் உப்பை தேய்த்துவிட்டீர்கள். காங்கிரஸ் தலைவர் சோகத்தின் பெயரில் நகைச்சுவை செய்வதை நிறுத்த வேண்டும்.
ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தினரும் எப்போதும் பாகிஸ்தானின் பயங்கரவாதம், பாகிஸ்தானின் தவறான செயல்கள் மற்றும் பாகிஸ்தானின் குற்றச்செயல்கள் மறைப்புக்கான தாக்குதல்களை வழங்குகிறார்கள். இவை அனைத்தும் தற்செயலானவை அல்ல. பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் நேரடி ஒத்துழைப்பு.






