search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானை நம்பவே முடியாது என்பதை இன்றைய துப்பாக்கிச் சூடு நிரூபித்துள்ளது
    X

    பாகிஸ்தானை நம்பவே முடியாது என்பதை இன்றைய துப்பாக்கிச் சூடு நிரூபித்துள்ளது

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று அடிக்கடி கூறும் பாகிஸ்தானை நம்பவே முடியாது என்பதை இன்றைய துப்பாக்கிச் சூடு நிரூபித்துள்ளதாக எல்லைப் பாதுக்காப்பு படை ஐ.ஜி. குறிப்பிட்டுள்ளார். #PakCeasefireviolation
    ஜம்மு:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    இந்நிலையில், எல்லைப்பகுதி துப்பாக்கிச் சூட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இருநாடுகளை சேர்ந்த ராணுவ செயல்பாட்டு பிரிவு டைரக்டர் ஜெனரல்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சில முடிவுகள் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர். 

    பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்பாக ஜம்மு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய எல்லைப் பாதுக்காப்பு படையின் ஜம்மு பகுதி ஐ.ஜி. ராம் அவ்தார், ‘போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று அடிக்கடி கூறும் பாகிஸ்தானை நம்பவே முடியாது என்பதை இன்றைய துப்பாக்கிச் சூடு நிரூபித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

    இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு நிச்சயமாக போர் நிறுத்த மீறலாகும். இதற்கு நாமும் தக்க பதிலடி கொடுத்துள்ளோம். இதில் எதிர்தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என்பதை யூகிக்க இயலவில்லை. எனினும், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை பாதிக்காத வகையில் இன்றைய பதில் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். #PakCeasefireviolation 
    Next Story
    ×