search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "militant"

  • ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார்.
  • முன்னாள் எம்.எல்.ஏ.-வை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

  அருணாசல பிரதேச மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மியான்மர் எல்லை பகுதியில் அமைந்துள்ள இடாநகர் மாவட்டத்தின் ராஹோ கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.

  தனிப்பட்ட வேலை காரணமாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டே தனது ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை சுட்டுக் கொன்றவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 2009-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட யெம்செம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.

  பிறகு 2015-ம் ஆண்டு பா.ஜ.க.-வில் இணைந்த இவர், 2024 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். அரசியலில் இணையும் முன் யெம்செம் சங்கலாங் மாவட்டத்தின் கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 

  • கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
  • இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது.

  ஒட்டாவா:

  கனடாவை சேர்ந்தவன் ஹர்தீப்சிங் நிசார். காலிஸ்தான் பயங்கரவாதியான இவன் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். இது தொடர்பாக இவன் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.

  இவன் மீது பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் நடந்த இந்து மத தலைவர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்ததால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவனை தேடி வந்தனர்.

  சமீபத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது. அவன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்தனர். அவனை பயங்கரமாக தேடி வந்த நிலையில் கனடாவில் கொல்லப்பட்டு உள்ளான். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

  கக்சிங் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
  மணிப்பூரின் கச்சிங் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

  போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அசாம் படையினர் மற்றும் அம்மாநில காவல்துறையின் குழு சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில், கக்சிங் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

  மேற்கொண்டு விசாரணைக்காக ஹியாங்கலம் போலீஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

  இதையும் படியுங்கள்.. இந்தியா-வங்காளதேசம் இடையே இன்று முதல் விரைவு ரெயில்கள் இயக்கம்
  தென் மாநிலங்களில் குண்டு வைக்க பயங்கரவாதிகள் சதி செய்துள்ளார்கள் என வதந்தி பரப்பிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
  பெங்களூரு:

  தென் மாநிலங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் சதி செய்துள்ளார்கள் என்று பெங்களுரு நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சுவாமி சுந்தரமூர்த்தி என்பவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து இருந்தார். மேலும் 19 பயங்கரவாதிகள் ராமநாதபுரத்தில் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் ரெயில்களிலும், முக்கிய இடங்களிலும் குண்டு வைத்து தகர்க்க சதி செய்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

  ஓசூரில் தான் லாரி ஓட்டியபோது இந்தியில் சிலர் பேசி கொண்டதை வைத்து இந்த தகவலை தெரிவிப்பதாகவும் அவர் கூறி இருந்தார். இதை தொடர்ந்து கர்நாடக மாநில டி.ஜி.பி. நீல்மணிராஜூ, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா, கோவா மற்றும் மாராட்டியம் ஆகிய மாநிலங்களில் டி.ஜி.பி.களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார்.

  இந்த நிலையில் பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய நபர் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் பெங்களூரு புறநகர் பகுதியான ஆவலஹள்ளி என்ற இடத்தில் வைத்து சுவாமி சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். முன்னாள் ராணுவ வீரரான அவர் இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைத்து இங்கேயும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று யூகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறி இருந்தார். வதந்தி பரப்பிய அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #MilitantKilled
  ஸ்ரீநகர்:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

  அப்போது வாட்டர்கம் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத்தொடங்கினர்.

  அவர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் பயங்கர்வாதீ ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பயங்கரவாதிகள் அங்கு பதுங்கியுள்ளார்களா என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். #MilitantKilled
  பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. #SushmaSwaraj
  புதுடெல்லி:

  பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் அடிக்கடி தாக்குதல் நடத்தி பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலால் இருநாட்டு உறவு சீர்கெட்டு வருகிறது.

  இதை சீரமைப்பதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை நாடுகிறது, பாகிஸ்தான். ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என இந்தியா தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

  இந்தநிலையில் காஷ்மீரின் புலவாமாவில் கடந்த மாதம் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இருநாட்டு உறவுகளும் மேலும் சீர்குலைந்து இருக்கிறது. எனினும் எல்லா பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து இருந்தார்.

  இதை மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இதை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-  பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து இரட்டை வேடம் போடுவது முட்டாள்தனமானது. புலவாமா தாக்குதலுக்கு பின்னும் இந்த இரட்டை வேடம் தொடர்கிறது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி ஒருபுறம் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் மறுபுறம் ராணுவம் அதை மறுத்து இருக்கிறது.

  பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு (இந்தியா) அந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு ஆதரவாகத்தான் இந்தியாவை பாகிஸ்தான் தாக்குகிறது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துக்காக ஏன் இந்தியாவை தாக்க முயன்றீர்கள்?

  பேச்சுவார்த்தை நடத்துவதில் உண்மையான அக்கறையும், தாராளமும் இருந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைத்து தனது ராஜதந்திரத்தை இம்ரான்கான் நிரூபிக்கட்டும்.

  தங்கள் சொந்த மண்ணில் இயங்கி வரும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காதவரை, அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. பயங்கரவாதம் இல்லாத அமைதியான சூழல் நிலவினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச முடியும். பயங்கரவாதத்தை பேசிக்கொண்டிருக்க நாங்கள் விரும்பவில்லை. அதன் மீதான நடவடிக்கையே எங்களுக்கு வேண்டும்.

  இவ்வாறு சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக கூறினார். #SushmaSwaraj
  ராஜஸ்தானில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, எல்லைப்பகுதியில் உள்ள வீரர்கள் மீதும் மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். உரிய நேரத்தில் எல்லா கணக்கையும் தீர்த்து விடலாம் என குறிப்பிட்டார். #Peacenotpossible #Modi
  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

  சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்டு பேசிய மோடி, பயங்கரவாதம் தொடரும்வரை உலகில் அமைதி நிலவும் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.

  தொடர்ந்து அவர் பேசியதாவது:-

  பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட மனநிலை உருவாகியுள்ளது.

  ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

  இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் உங்களுடன் உள்ளது என்று புல்வாமா தாக்குதலில் தங்களது உறவினரை இழந்து தவிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு நான் உறுதி அளிக்கிறேன்.  நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். பவானி மாதா மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம்.

  இவ்வாறு அவர் பேசினார். #Peacenotpossible #ifterrorismcontinues #Peaceintheworld  #Modi
  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று 3 போலீசாரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். #policemenshotdead #Shopianpolicemen
  ஜம்மு:

  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட சைன்போரா பகுதியில் உள்ள காவல் சாவடியில் இன்று 4 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் காவல் சாவடிக்குள் இருந்த போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த எதிர்பாராத தாக்குதலில் அப்துல் மஜித், மன்சூர் அஹமத், முஹம்மது அமின் ஆகிய 3 போலீசார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

  பலத்த காயங்களுடன் மேலும் ஒரு போலீஸ்காரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் காவல் சாவடிக்குள் போலீசார் வைத்திருந்த ஆயுதங்களையும் அள்ளிச் சென்றனர்.
  #policemenshotdead  #Shopianpolicemen
  வங்காளதேசம் நாட்டின் டாக்கா நகரில் உள்ள ஓட்டலில் இந்திய மாணவி உள்பட 20 பேரை கொன்று குவித்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். #bannedmilitant #KhorshedAlamkilled
  டாக்கா:

  வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு ஓட்டலில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவியான தாரிஷி ஜெயின் உள்பட 20 வெளிநாட்டினர் கழுத்தை அறுத்தும், துப்பாக்கிகளால் சுட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

  மீட்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர். கடந்த பல ஆண்டுகளாகவே வங்காளதேசத்தில் இயங்கிவரும் ஜமாயத்துல் முஜாஹிதீன் என்ற உள்நாட்டு பயங்ரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பின்னர் தெரியவந்தது.

  தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளை ராணுவத்தினர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.

  இந்நிலையில், அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜமாயத்துல் முஜாஹிதீன் பயங்ரவாத அமைப்பின் தலைவரான ஷமில் (எ) கோர்ஷெட் ஆலம் மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதைதொடர்ந்து, நேற்றிரவு அப்பகுதியை முற்றுகையிட்ட போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் சூழ்ந்து கொண்டதை கண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.  போலீசார் நடத்திய எதிர்தாக்குதலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் கோர்ஷெட் ஆலம் பிடிபட்டார். அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

  பிடிபட்ட பயங்கரவாதிகள் தலைவரையும், காயமடைந்த இரு போலீசாரையும் அருகாமையில் உள்ள ஷாஹித் ரஹ்மான் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். போகும் வழியில் கோர்ஷெட் ஆலம்  உயிரிழந்ததாக வங்காளதேசம் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டு வருகின்றன. #Topmilitantleader #Bangladeshmilitantleader  #bannedmilitant #KhorshedAlamkilled
  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று தெஹ்ரீக் அல் முஜாகிதீன் பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
  ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த சண்டையில் தெஹ்ரீக் அல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த சவுகத் அகமது பட் என்ற பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். 

  அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவன் பாரமுல்லாவில் நேற்று போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்கிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவன்.

  நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் போலீசார் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி  தாக்கினர். இந்த தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். பின்னர் பயங்கரவாதிகளை போலீசார் துரத்திச் சென்றனர். இதில் பைசான் மஜீத் பட் என்பவன் சிக்கினான். தப்பி ஓடிய அவனது கூட்டாளியான சவுகத் அகமது பட் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளான்.

  ஸ்ரீநகரின் பதே கதல் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில்  2 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய கூட்டாளி சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார். நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. #JKAttack #JKEncounter