குப்வாராவில் என்கவுன்டர்- பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

எல்லைக்கோடு அருகே குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.
குப்வாராவில் என்கவுன்டர்- பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று (ஜூலை 18) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

தொடர்ந்து நடந்த நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு வாரத்திற்குள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.

வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் கெரான் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் என்கவுன்டர் தொடங்கியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் மேற்கொண்டு தகவல்கள் இனி வெளிவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com