என் மலர்
இந்தியா

பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூட்டில் குக்கி இனப் பெண் பலி.. மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம்!
- ஆறு குகி சிவில் சமூக அமைப்புகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்தன.
- அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் மூடப்பட்டன.
கடந்த வியாழக்கிழமை மத்திய பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இனப் பெண் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டவர் சுராசந்த்பூரின் லங்சிங்மன்பி கிராமத் தலைவரின் மனைவி ஹோய்கோல்ஹிங் என்று தெரிய வந்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினரின் அலட்சியத்தை கண்டித்து குகி பழங்குடியினர் தலைவர்கள் மன்றம் (ITLF) காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
ஆறு குகி சிவில் சமூக அமைப்புகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் காலவரையற்ற முழு அடைப்பால் நேற்று முதல் மணிப்பூரின் சுராசந்த்பூர் மற்றும் குகி பெரும்பான்மைப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் மூடப்பட்டன. மணிப்பூரில் 2023இல் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கிடையே வெடித்த இனக்கலவரம், மோதல்கள் தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலானது குறிப்பிடத்தக்கது.






