என் மலர்
இந்தியா

ஆபரேஷன் அகால்: குல்காமில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை - 2 வீரர்கள் வீரமரணம்
- இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
- இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது.
இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இதையடுத்து ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இன்று (சனிக்கிழமை) ஆபரேஷன் அகாலின் ஒன்பதாவது நாள்.
இந்நிலையில் இன்று பயங்கரவாதிகள் உடனான சண்டையில் லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் மற்றும் சிப்பாய் ஹர்மிந்தர் சிங் என்ற 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.






