என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
    X

    பாகிஸ்தானில் 52 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

    • பஞ்சாப் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    • கைபர் பக்துன்வா மாகாணத்தில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    லாகூர்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின் எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

    தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் 3 மாகாணங்களில் தனித்தனி நடவடிக்கைகளில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 52 பயங்கரவாதிகளைக் கொன்றனர்.

    பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு படை, ராணுவம் இணைந்து தலிபான் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் படையினரை குறிவைத்து அதிரடி வேட்டை நடத்தினர்.

    பஞ்சாப் மாகாணத்தில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தானில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 41 பேரும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஒரு தளபதி உட்பட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.

    Next Story
    ×