காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை- பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை- பயங்கரவாதி சுட்டுக்கொலை
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநில மலைப்பகுதியில் நவீன ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். குப்வாரா மாவட்டம் காம்காரி பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.  இந்திய ராணுவ ஜவான் வீர மரணமடைந்தார்.

ராணுவ மேஜர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com