இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது: அமித்ஷா

பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர்.இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.
இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது: அமித்ஷா
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக பாதுகாப்பு படையினர், சத்தீஸ்கர் மாநில போலீசாரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:

அனைத்து நக்சல்களும் சரணடையும் வரையும், ஒழிக்கப்படும் வரையும் பா.ஜ.க. அரசு ஓயாது.

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் காட்டிய துணிச்சலும், வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயமாக நினைவுகூரப்படும்.

ஒவ்வொரு மலைப்பகுதிகளிலும் நக்சலைட்டுகள் ஐஇடி வகை குண்டுகளை மறைத்து வைத்திருந்த போதும், பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர்.

கரேகுட்டா மலையில் நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தை பாதுாப்பு படையினர் துல்லியமாக அழித்தனர்.

பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை நக்சலைட்டுகள் சீர்குலைத்தனர். அரசு நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தனர்.

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது படுகாயம் அடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதிசெய்யவும் பா.ஜ.க. அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.

அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com