search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    4 மாநில தேர்தல் முடிவுகள்: மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்- ராகுல் காந்தி
    X

    4 மாநில தேர்தல் முடிவுகள்: மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்- ராகுல் காந்தி

    • மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலையில் உள்ளது.
    • தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க உள்ளது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.

    இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

    இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் பின்னடைவில் இருந்து வருகிறது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் 63 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க உள்ளது.

    இந்நிலையில், 4 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-

    மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் - சித்தாந்தப் போர் தொடரும்.

    தெலுங்கானா மக்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் - தெலங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.

    உழைப்பிற்கும் ஆதரவிற்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×