டெல்லி மாநகராட்சி தேர்தல்- பாஜகவை முந்தியது ஆம் ஆத்மி: 122 வார்டுகளில் முன்னிலை

கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது.250 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை
டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை
Published on

கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை 68 கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 122 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 113 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com