search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unemployed youths"

    • 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
    • அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ- மாணவிகள், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டு களுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டு வருகிறது. 10-ம் வகுப்பில் தோல்வியுற்ற வர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம் மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராகவும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்தும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும், பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., ஓ.சி. பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருக்க வேண்டும்.

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும்.

    மாற்றுத்திறனாளி களுக்கு வயது உச்ச வரம்பு, வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600/- பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் களுக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000/- வீதம் 10 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ- மாணவிகள், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனிலும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    தகுதி உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை(பழையது), மற்றும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆன்லைன் பிரிண்ட் அவுட் போன்றவற்றுடன் அலுவலக வேலை நாட்களில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வருகை புரிந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய விண்ணப்பத்தினை தனித்தனியே பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, பொதுப்பிரிவினர் மட்டும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வருவாய்த்துறை சான்றில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை(பழையது/ஆன்லைன் பிரிண்ட் அவுட்), அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம், ஆதார் அட்டை, ரேசன் அட்டை ஆகியவற்றின், அசல் மற்றும் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் (பொது) கீழ் பயன்பெற, பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்&2 மற்றும் பட்டப்படிப்பு தகுதியை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2018 அக்டோபர் 1&ந் தேதி முதல் டிசம்பர் 31&ந் தேதி வரையிலான காலத்திற்குள், 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர். இதேபோல் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறவும் அதே கால அளவிற்குள், ஓராண்டு பதிவினை நிறைவு செய்தவர்கள் தகுதியுடையவராவர்.

    இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்போரின் ஒட்டுமொத்த குடும்ப வருமானம் ஆண்டுக்கு  ரூ.50,000&க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு குடும்ப வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது. விண்ணப்பதாரர் அரசுத்துறை, தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடுபவராகவோ இருத்தல் கூடாது. இவர்களுக்கு விண்ணப்பபடிவங்கள் வருகிற 10&ந் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே இத்திட்டத்தில் பயன் பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு எண்ணுடன் தங்களது ஆதார் அடையாள எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். 2018& 2019&ம் நிதியாண்டிற்கு சமர்ப்பிக்க வேண்டிய சுய உறுதி மொழி ஆவணப்படிவத்துடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் கடந்த செப்டம்பர் மாதம் வரை உரிய குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    ×