என் மலர்
நீங்கள் தேடியது "allowance"
- ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
- 2,000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தாராபுரம் :
விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 4 மாத இடைவெளியில் மூன்று தவணைகளில் இத்தொகை வழங்கப்படுகிறது. இதில் 13வது தவணையாக 2,000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுகின்றனர். திட்டத்தின் கீழ் ஏராளமான போலி விவசாயிகள் பயன் பெறுவதாக எழுந்த புகாரையடுத்து சரியான விவசாயிகளுக்கு மட்டும் நிதியுதவி சென்று சேர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.இதனால் சம்மந்தப்பட்ட விவசாய நிலம் யார் பெயரில் உள்ளதோ அவர்களது வங்கிக் கணக்கிற்கு தான் உதவித் தொகை விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இடைப்பட்ட நாட்களில் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பட்டியல் உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து வேளாண்மை துறையினர் கூறுகையில், விவசாய நிலம் வைத்துள்ள பலர் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். தங்களது பெற்றோர் பெயரில் உள்ள நிலத்துக்கு வாரிசுகள் சொந்தம் கொண்டாடும் போது, எந்த வாரிசின் பெயரில் நிலம் உள்ளதோ அவரது வங்கிக் கணக்கிற்கு தான் உதவித் தொகை அனுப்பப்படும். இதனை விண்ணப்பதாரர்களுக்கு தெளிவுப்படுத்தி வருகிறோம் என்றனர்.
- சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
- இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.
நாமக்கல்:
சேலம் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள|
காளிப்பட்டி கந்தசாமி கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சேலம், நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழா காலங்களில் ஏராளமான சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். கோவில் நிர்வாகம், செயல் அலுவலர், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் உண்டி யல் வசூலில் முறைகேடு நடப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து நேற்று குமாரபாளையம் சரக இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் அதி காரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது இந்து அறநிலைத் துறையால் முத்திரை இடப்பட்ட உண்டியல் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதன் அருகே முத்திரை இடாத 2 குட உண்டியல், 2 டிரம் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், 4 உண்டியலுக்கும் முத்திரை இட்டனர். மேலும் அனுமதி இல்லாமல் உண்டியல் வைத்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே அன்னியூர் ஊராட்சியை சேர்ந்தமுருகன் (வயது 40) அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்தபொழுது இறந்தார். இதையொட்டி அவரது குடும்பம் வருமானமின்றி கஷ்டப்படுவதாக அவரது மனைவிநளினி மாதாந்திர உதவித்தொகை வழங்க கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 குழந்தைகளின் நன்றாக படிக்க வைக்க தேவையான உதவிகளும் வழங்குவதாக மாவட்ட கலெக்டர் மோகன்,தெரிவித்தார்.
கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் (பொது) கீழ் பயன்பெற, பள்ளியிறுதி வகுப்பு தோல்வி, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்&2 மற்றும் பட்டப்படிப்பு தகுதியை கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2018 அக்டோபர் 1&ந் தேதி முதல் டிசம்பர் 31&ந் தேதி வரையிலான காலத்திற்குள், 5 ஆண்டுகள் நிறைவு செய்யும் அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர். இதேபோல் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறவும் அதே கால அளவிற்குள், ஓராண்டு பதிவினை நிறைவு செய்தவர்கள் தகுதியுடையவராவர்.
இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்போரின் ஒட்டுமொத்த குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50,000&க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு குடும்ப வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது. விண்ணப்பதாரர் அரசுத்துறை, தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடுபவராகவோ இருத்தல் கூடாது. இவர்களுக்கு விண்ணப்பபடிவங்கள் வருகிற 10&ந் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே இத்திட்டத்தில் பயன் பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு எண்ணுடன் தங்களது ஆதார் அடையாள எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். 2018& 2019&ம் நிதியாண்டிற்கு சமர்ப்பிக்க வேண்டிய சுய உறுதி மொழி ஆவணப்படிவத்துடன் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் மற்றும் கடந்த செப்டம்பர் மாதம் வரை உரிய குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews