என் மலர்
நீங்கள் தேடியது "Scooter"
- ஹோண்டா நிறுவனத்தின் டியோ லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த மாடலின் என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இது ஹோண்டா நிறுவனத்தின் ரெட் விங் விற்பனை மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் டீலக்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பேஸ் மாடலுடன் ஒப்பிடும் போது டியோ ஸ்போர்ட்ஸ் மாடல் ஸ்டிராண்டியம் சில்வர் மெட்டாலிக் - பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் - பிளாக் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர புதிய லிமிடெட் எடிஷன் மாடலிலும் 110சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.6 ஹெச்.பி. பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் மாடலில் அதே ஸ்போர்ட்ஸ் டிசைன், எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு 130 மில்லிமீட்டர் அளவில் இரண்டு புறமும் டிரம் பிரேக்குள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்திய சந்தையில் புதிய ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் ஸ்டாண்டர்டு வேரியண்ட் விலை ரூ. 68 ஆயிரத்து 317 என்றும் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 73 ஆயிரத்து 317 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பேஸ் வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது ஸ்போர்ட்ஸ் ஸ்டாண்டர்டு வேரியண்ட் விலை ரூ. 500, ஸ்போர்ட்ஸ் டீலக்ஸ் மாடல் விலை ரூ. 2 ஆயிரம் அதிகரித்து இருக்கிறது.
- யமஹா நிறுவனம் தனது பசினோ 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
- இந்த மாடல் தற்போது புதிய நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் பசினோ 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் முற்றிலும் புதிய சில்வர் நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய யமஹா பசினோ 125 Fi ஹைப்ரிட் மாடலின் விலை ரூ. 78 ஆயிரத்து 098, எக்ஸ்-ஷோரூம் சென்னை என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தி கால் ஆப் தி புளூ திட்டத்தின் கீழ் பசினோ 125 Fi ஹைப்ரிட் மாடல் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ் நாட்டு ஸ்கூட்டர் சந்தையில் யமஹா நிறுவனம் பத்து சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. தற்போது முற்றிலும் புது நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து இந்த மாடலின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

யமஹா பசினோ 125 Fi ஹைப்ரிட் மாடலில் ஏர் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 125சிசி புளூ கோர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் 8.2 பி.எஸ். பவர் மற்றும் 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் இதன் டிஸ்க் வேரியண்ட் மாடல் தற்போது விவிட் ரெட் ஸ்பெஷல், மேட் பிளாக் ஸ்பெஷல், கூல் புளூ மெட்டாலிக், டார்க் மேட் புளூ, சாவ் காப்பர், எல்லோ காக்டெயில், சியான் புளூ, விவிட் ரெட் மற்றும் மெட்டாலிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் டிரம் பிரேக் வேரியண்ட் விவிட் ரெட், கூல் புளூ மெட்டாலிக், எல்லோ காக்டெயில், டார்க் மேட் புளூ, சாவ் காப்பர், சியான் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
- யமஹா நிறுவனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மைலேஜ் சேன்ஜ் நிகழ்வை நடத்தியது.
- இதில் மொத்தம் நூறு வாடிக்கையாள்கள் கலந்து கொண்டனர்.
யமஹா நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் ரேன்ஜ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மைலேஜ் சேலன்ஜ் ஆக்டிவிட்டி பெயரில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் நூறு யமஹா வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய சந்தையில் யமஹா நிறுவனத்தின் 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களின் கீழ் பசினோ 125 Fi ஹைப்ரிட், ரே ZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் ஸ்டிரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மைலேஜ் சேலன்ஜ் நிகழ்ச்சி தொடங்கும் முன் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர் பயன்பாடு பற்றி செய்யக் கூடிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் விவரிக்கப்ட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கும் இலவச வாட்டர் வாஷ், பத்து பாயிண்ட் வாகன செக்கப் உள்ளிட்டவை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. கலந்து கொண்டவர்களில் அதிக மைலேஜ் பெற்று அகத்திய ஐந்து வெற்றியாளர்கல் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் மற்றும் கிப்ட் கார்டுகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்டு அதிக மைலேஜ் பெற்று முதலிடம் பெற்றவர் தனது ஹைப்ரிட் ஸ்கூட்டர் கொண்டு 105.9 கி.மீ. மைலேஜ் பதிவு செய்து இருந்தார். இவரை தொடர்ந்து மற்ற நான்கு இடங்களை பிடித்தவர்கள் முறையே 97.86 கி.மீ., 97.56 கி.மீ, 96.69 கி.மீ மற்றும் 96.3 கி.மீ. மைலேஜ் பெற்றனர்.
- ஹோண்டா நிறுவனம் விரைவில் பிரீமியம் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இது யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான காப்புரிமை கோரி ஹோண்டா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது. புதிய ஹோண்டா ஸ்கூட்டர் வேரியோ 160 என்று அழைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் யமஹா ஏரோக்ஸ் 155 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் உள்ளதை போன்றே ஹோண்டா வேரியோ 160 மாடலும் ஸ்போர்ட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கிரேசியா மாடலை போன்று காட்சியளிக்கிறது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், ஷார்ப் லைன்கள் மற்றும் கிரீஸ்கள் உள்ளன. இந்த மாடலில் 160சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. பவர், 13.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஹோண்டா வேரியோ மாடலில் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏ.பி.எஸ்., யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், 18 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் வேறு எந்த மாடலையும் ஹோண்டா விற்பனை செய்யாத நிலையில், வேரியோ மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.







