என் மலர்tooltip icon

    பைக்

    158கிமீ ரேஞ்ச் வழங்கும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - சம்பவம் செய்த டிவிஎஸ்
    X

    158கிமீ ரேஞ்ச் வழங்கும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - சம்பவம் செய்த டிவிஎஸ்

    • யுஎஸ்பி சார்ஜிங், ஓடிஏ (OTA) அப்டேட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
    • டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளன.

    டிவிஎஸ் தனது மூன்றாவது மின்சார ஸ்கூட்டர், ஆர்பிட்டரை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் அதன் மின்சார ஸ்கூட்டர் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த இ-ஸ்கூட்டரின் விலை ரூ.99,900 ஆகும்.

    புதிய டிவிஎஸ் ஆர்பிட்டர் ஒட்டுமொத்த ஸ்டைலிங் மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் பெரிய LED விளக்குகள், விண்ட்ஸ்கிரீன் மற்றும் அளவில் பெரிய, சற்றே வளைந்த பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    செயல்திறனைப் பொறுத்தவரை, ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டர் 158 கிலோமீட்டர் வரை செல்லும் ரேஞ்ச் வழங்குகிறது. இது பலவித பேட்டரி ஆப்ஷன்களைக் கொண்ட ஐகியூப் (iQube) போல் இல்லாமல் 3.1 kWh பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது.

    டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் குரூயிஸ் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற சில அம்சங்களுடன் வருகிறது. யுஎஸ்பி சார்ஜிங், ஓடிஏ (OTA) அப்டேட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.

    டிவிஎஸ் ஆர்பிட்டர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நியான் சன்பர்ஸ்ட், ஸ்ட்ராடோஸ் ப்ளூ, லூனார் கிரே, ஸ்டெல்லர் சில்வர், காஸ்மிக் டைட்டானியம் மற்றும் மார்ஷியன் காப்பர் ஆகிய ஆறு வண்ணங்களில் விற்பனை செய்யப்படும். இது ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டருக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    Next Story
    ×