என் மலர்
நீங்கள் தேடியது "Hero Vida"
- இந்த மின்சார ஸ்கூட்டரில் கோ மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
- இவை வெவ்வேறு பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் கொண்டிருக்கும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்சார வாகன தயாரிப்பு பிரிவான விடா, ஜூலை 1 ஆம் தேதி இந்தியாவில் அதன் புதிய மலிவு விலை VX2 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த நிகழ்வுக்கு முன்பு, நிறுவனம் வாகனத்தின் விவரங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு வந்தது.
இதுவரை, மின்சார ஸ்கூட்டரில் முன்பக்க டிஸ்க் பிரேக் இருக்காது என்றும், குறைந்த வகைகளில் டிரம் பிரேக்குகளுடன் வரும் என்று தெரிவிக்கப்ப்டுள்ளது. மேலும், V2 மாடலுடன் வடிவமைப்பு ஒற்றுமைகள் இருக்கும். இப்போது, EV பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
தோற்றத்தில் தொடங்கி, விடா VX2 மின்சார ஸ்கூட்டர் மென்மையான உடல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும். மேலும், இது வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள், ஆரஞ்சு, கருப்பு மற்றும் சாம்பல் போன்ற நிறங்களில் கிடைக்கும். இந்த மோனோடோன் விருப்பங்கள் V2 மின்சார ஸ்கூட்டர்களுடன் வழங்கப்படும் டூயல் டோன் வெர்ஷன்களில் இருந்து வேறுபட்டவை.
இது தவிர, இந்த மின்சார ஸ்கூட்டரில் கோ மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவை வெவ்வேறு பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் கொண்டிருக்கும். சிறிய பேட்டரி பேக் வெர்ஷனில் 2.2 kWh யூனிட் இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பெரிய பேட்டரி பேக் வெர்ஷனில் 3.4 kWh பேட்டரி பேக் வழங்கப்படலாம். இரண்டு மாற்றக்கூடிய பேட்டரிகளைக் கொண்ட கழற்றக்கூடிய பேட்டரி பேக்கும் இவற்றில் இருக்கலாம். இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 100 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என்று கூறப்படுகிறது.
அறிமுகப்படுத்தப்பட்டதும், விடா VX2 விலை சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தையில் பஜாஜ் சேட்டக், ஓலா S1 ஏர் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களுக்கு சரியான போட்டியாளராக மின்சார ஸ்கூட்டரை மாற்றும்.
- ஹீரோ நிறுவனம் V2 மாடல்களில் வழங்கப்படும் ஸ்ப்லிட் சீட்-ஐ மாற்றி ஒற்றை இருக்கையை வழங்கியுள்ளது.
- விடா VX2 முன்புறம் டிஸ்க் பிரேக்குகள், டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது.
சமீபத்தில், ஹீரோ மோட்டோகார்ப் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது. அதன்படி, ஜூலை 1 ஆம் தேதி இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்யப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. வரவிருக்கும் ஸ்கூட்டர்கள் விடா நிறுவன மாடல்களின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் நிறுவனம் கூறியது.
இருப்பினும், ஹீரோ ஏற்கனவே தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் டீலர்ஷிப்களில் ஸ்டாக் செய்யத் தொடங்கியுள்ளது. ஹீரோ விடா VX2 இப்போது ஒரு ஷோரூமில் வைக்கப்பட்டுள்ளது. பேட்டரி பேக் பற்றிய சரியான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது 2.2 kWh முதல் 3.9 kWh வரையிலான பேட்டரி பேக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஹீரோ விடா VX2 ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 165 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா மாடல்களின் ஒரு பகுதியாக இருந்தாலும், இந்த பிராண்டில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் இருந்து அதை வேறுபடுத்தும் சில அம்சங்களைக் கொண்டுள்ளது.
விடா VX2 சாவியை கொண்டு இயக்க முடியும். அதே நேரத்தில் விடா V2 ஸ்மார்ட் கீ வசதியையும் கொண்டுள்ளது. மேலும், TFT திரை V2 எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை விட மிகவும் சிறியதாகத் தெரிகிறது.
ஹீரோ நிறுவனம் V2 மாடல்களில் வழங்கப்படும் ஸ்ப்லிட் சீட்-ஐ மாற்றி ஒற்றை இருக்கையை வழங்கியுள்ளது. விடா VX2 இன் ஒட்டுமொத்த வடிவமைப்பைப் பார்த்தால், இது எளிமையான வடிவமைப்பைக் கொண்டிருப்பதைக் காணலாம். விடா VX2 முன்புறம் டிஸ்க் பிரேக்குகள், டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது.
வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் ஹீரோவின் திட்டங்கள், விடா VX2 மிகவும் மலிவு விலையில் வைக்கப்படும் என்பதைக் குறிக்கிறது. VX2 இன் விலை விவரங்கள் ஜூலை 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதே வேளையில், இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.65,000 முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய புது விவரங்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டு உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசரில் விடா எலெகெட்ரிக் ஸ்கூட்டர் போர்டபில் பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
அந்த வகையில், இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த ஸ்கூட்டர் மாடல் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்திய சந்தையில் பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஏத்தர், டிவிஎஸ், ரெவோல்ட் மற்றும் பஜாஜ் என குறைந்த நிறுவனங்களே வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தாய்வானை சேர்ந்த கோகோரோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. கோகோரோ நிறுவனம் பேட்டரி மாற்றும் வசதியை தாய்வானில் வழங்கி வருகிறது. அந்த வகையில், தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கோகோரோ பேட்டரி மாற்றும் வசதியை பெற ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டு இருக்கிறது. பேட்டரியை கழற்றும் வசதி இருப்பதால், பயனர்கள் இவற்றை வீடுகளிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நகர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.