என் மலர்tooltip icon

    பைக்

    குறைந்த விலையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - ரிலீசுக்கு ரெடியான விடா VX2
    X

    குறைந்த விலையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - ரிலீசுக்கு ரெடியான விடா VX2

    • இந்த மின்சார ஸ்கூட்டரில் கோ மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
    • இவை வெவ்வேறு பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் கொண்டிருக்கும்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மின்சார வாகன தயாரிப்பு பிரிவான விடா, ஜூலை 1 ஆம் தேதி இந்தியாவில் அதன் புதிய மலிவு விலை VX2 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த நிகழ்வுக்கு முன்பு, நிறுவனம் வாகனத்தின் விவரங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு வந்தது.

    இதுவரை, மின்சார ஸ்கூட்டரில் முன்பக்க டிஸ்க் பிரேக் இருக்காது என்றும், குறைந்த வகைகளில் டிரம் பிரேக்குகளுடன் வரும் என்று தெரிவிக்கப்ப்டுள்ளது. மேலும், V2 மாடலுடன் வடிவமைப்பு ஒற்றுமைகள் இருக்கும். இப்போது, EV பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

    தோற்றத்தில் தொடங்கி, விடா VX2 மின்சார ஸ்கூட்டர் மென்மையான உடல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும். மேலும், இது வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள், ஆரஞ்சு, கருப்பு மற்றும் சாம்பல் போன்ற நிறங்களில் கிடைக்கும். இந்த மோனோடோன் விருப்பங்கள் V2 மின்சார ஸ்கூட்டர்களுடன் வழங்கப்படும் டூயல் டோன் வெர்ஷன்களில் இருந்து வேறுபட்டவை.

    இது தவிர, இந்த மின்சார ஸ்கூட்டரில் கோ மற்றும் பிளஸ் என இரண்டு வேரியண்ட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இவை வெவ்வேறு பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் கொண்டிருக்கும். சிறிய பேட்டரி பேக் வெர்ஷனில் 2.2 kWh யூனிட் இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பெரிய பேட்டரி பேக் வெர்ஷனில் 3.4 kWh பேட்டரி பேக் வழங்கப்படலாம். இரண்டு மாற்றக்கூடிய பேட்டரிகளைக் கொண்ட கழற்றக்கூடிய பேட்டரி பேக்கும் இவற்றில் இருக்கலாம். இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 100 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என்று கூறப்படுகிறது.

    அறிமுகப்படுத்தப்பட்டதும், விடா VX2 விலை சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சந்தையில் பஜாஜ் சேட்டக், ஓலா S1 ஏர் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற மாடல்களுக்கு சரியான போட்டியாளராக மின்சார ஸ்கூட்டரை மாற்றும்.

    Next Story
    ×