என் மலர்
நீங்கள் தேடியது "ஓலா ஸ்கூட்டர்"
- ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.
- பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் அடிக்கடி Repair-ஆன ஓலா ஸ்கூட்டரை வாடிக்கையாளர் ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து கொளுத்திய சம்பவம் இணையத்தில் பேசுபொருளானது.
ஷோரூம் வாசலிலேயே ஓலா ஸ்கூட்டரை தீ வைத்து கொளுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது.
ஓலா ஸ்கூட்டர் Repair ஆனதை பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்.
- இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஓலாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4,680 பேட்டரி செல்களால் நிரம்பியுள்ளன.
- ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 11kW மிட்-டிரைவ் மின்சார மோட்டாரைப் பயன்படுத்துகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் 2025 ஓலா S1 ப்ரோ பிளஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 1.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஓலாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4,680 பேட்டரி செல்களால் நிரம்பியுள்ளன.
ஓலா எஸ்1 ப்ரோ பிளஸ் விலை முன்பு ரூ. 2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது, இது தற்போதைய விலையை விட ரூ. 30,000 அதிகம். அதேபோல், 2025 ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் விலை ரூ. 1.90 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 34,000 குறைவாகும்.
வாடிக்கையாளர்கள் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களையும் அருகில் உள்ள ஓலா டீலர்ஷிப் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ முன்பதிவு செய்யலாம். 2025 நவராத்திரி பண்டிகையின் போது, அதாவது செப்டம்பர் 2025 கடைசி வாரத்தில் இந்த மாடல்களின் டெலிவரி தொடங்கும்.

ஓலா எஸ்1 ப்ரோ பிளஸ் மாடலில் 13kW (17.5bhp) மின்சார மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 5.3kWh வேரியண்டிற்கு ஸ்கூட்டரை அதிகபட்சமாக மணிக்கு 141 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்துகிறது. 4kWh வேரியண்ட் அதிகபட்சமாக மணிக்கு 128 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் 5.3kWh வேரியண்ட் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர்கள் (IDC) வரை செல்லும் ரேஞ்ச் வழங்குகிறது. அதே நேரத்தில் 4kWh வேரியண்ட் 242 கிலோமீட்டர்கள் (IDC) வரை ரேஞ்ச் வழங்குகிறது.
ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 11kW மிட்-டிரைவ் மின்சார மோட்டாரைப் பயன்படுத்துகிறது. இது மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தை வழங்குகிறது. ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 9.1kWh வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 501 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. அதே நேரத்தில் 4.5kWh வேரியண்ட் 252 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்குகிறது.
- மணமகள் நீண்ட நாட்களாக பயிற்சி செய்திருந்த நடனத்தை ஆட முடியாதோ என கண்ணீர் வடிக்க தொடங்கினார்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஓலா ஸ்கூட்டரின் புளுடூத் வசதி மூலம், மணமகள் தனது திருமணத்தில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது திருமணத்தில் நடனமாட வேண்டும் என்ற மணமகளின் ஆசை நிறைவேறியது என்ற தலைப்புடன் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், மணமகள் நடனமாட தயாரான போது திருமணம் நடக்கும் இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் வந்து ஸ்பீக்கரில் பாட்டு போடக்கூடாது என தடை போட்டுள்ளனர்.
இதனால் மணமகள் நீண்ட நாட்களாக பயிற்சி செய்திருந்த நடனத்தை ஆட முடியாதோ என கண்ணீர் வடிக்க தொடங்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் ஓலா ஸ்கூட்டரை மண்டபத்திற்குள் கொண்டு வந்து மேடைக்கு அருகில் நிறுத்தி ஸ்கூட்டரில் இருக்கும் ஸ்பீக்கருடன் புளுடூத் வாயிலாக இணைத்து பாட்டு போட்டனர். பின்னர் மணமகள் தனது ஆசைப்படி நடனமாடிய காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோவை ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் தளத்தில் டேக் செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு.
- சர்வீஸ் மையத்திற்கு சென்றால் சரியாக ரிப்பேர் பார்த்து தரும் சேவையில் அதிருப்தி.
ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அடிக்கடி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகிறது. சர்வீஸ் சென்டர் சென்றால் சரியான பதில் கிடைப்பதில்லை என்ற வாடிக்கையாளர்களின் குமுறல் செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளது. சர்வீஸ் சென்டர் முன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு, ஷோ ரூம்-க்கே தீ வைப்பு போன்ற சம்பவங்கள் விரக்தியான வாடிக்கையாளர்களால் நடந்துள்ளன. பெங்களூரு பெண் ஒருவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேஸ்ட் என பெரிய போர்டு தொங்கவிட்டு சென்றார்.
இந்த நிலையில் சர்வீஸ் சென்டர்களில் ஓலா நிறுவனம் பவுன்சர்களை நிறுத்தியுள்ளதாகவும் பல வாடிக்கையாளர்கள் தங்களது ஆதங்களை வெளிப்படுத்தியுள்ளனர். சில வாடிக்கையாளர்கள் Stand-up காமெடியன் குணால் கம்ராவை டேக் செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த எக்ஸ் தள பதிவுகளை சுட்டிக்காட்டி குணால் கம்ரா ரீ-ட்வீட் ஓலா நிறுவனம் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
ஆர்.ஜே. காஷ்யப் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ஓலா தற்போது ஒவ்வொரு சர்வீஸ் சென்டருக்கும் 5 முதல் 6 பவுன்சர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஓலா சர்வீஸ் சென்டருக்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள பவுன்சர்கள் பெண் வாடிக்கையாளர்கள் உள்பட அனைத்து ஓலா வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்க்க முடியாது. ஆகவே, இதுபோன்ற சர்வீஸைதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதை ரீ-ட்வீட் செய்த குணால் கம்ரா, "தயவு செய்து செய்தியாளர்கள் இதுகுறித்து சரிபார்க்கலாம். இது உண்மையாக இருந்தால் உண்மையிலான தனித்துவமானது. விற்பனை குழு விற்பனைக்கான. விற்பனைக்குப் பிறகு பவுன்சர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாருங்கள் குணால் கம்ரான் அமோல் சவுத்ரி என்பவர் 20-10-2004 அன்று ஓலா சர்வீஸ்க்காக அப்பாயின்ட்மென்ட் பெற்றிருந்தேன். ஸ்கூட்டரை ரிப்பேர் பார்ப்பதற்கு யாரும் எடுத்துச் செல்லவில்லை. பவுன்சர்கள் மையத்தில் உள்ளனர். அவர்கள் ஆயுதங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு பதில் அனித்தனர் என்றார்.
இந்த பதிவை ரீ-ட்வீட் செய்த குணால் கம்ரா "ஓலா நிறுவன உரிமையாளர் பவிஷ் அகர்வாலை டேக் செய்து, இதுபோன்ற புதுமையான இந்தியா தயாரிப்பை விற்றுவிட்டீர்கள். ஊழியர்களை பாதுகாக்க பவுன்சர்சளை அமர்த்த வேண்டியிருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
குணால் கம்ரா முதன்முறையாக ஓலாவை விமர்சிக்கவில்லை. இதற்கு முன்னதாக வாடிக்கையாளர்களின் புகார் குறித்து வெளிப்படைதன்மை இல்லை, தற்போதைய வாடிக்கையாளர்களின் புகார்களை நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு இல்லை என விமர்சித்திருந்தார்.
- Ola Electric தனது விற்பனை மற்றும் சேவை வலையமைப்பை டிசம்பர் 25ம் தேதி 4000 ஆக விரிவுபடுத்த உள்ளது.
- நிறுவனம் S1 Pro இன் வரையறுக்கப்பட்ட 'Sona' பதிப்பையும் அசல் 24-காரட் தூய தங்கக் கூறுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பியூர்-ப்ளே EV நிறுவனமான Ola Electric, ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் EVகளை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒரு புரட்சிகரமான முயற்சியாக, #SavingsWalaScooter எனும் விளம்பரப் பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, Ola Electric தனது விற்பனை மற்றும் சேவை வலையமைப்பை டிசம்பர் 25ம் தேதி 4000 ஆக விரிவுபடுத்த உள்ளது. இது, உலகளவில் EV விநியோகத்தின் விரைவான அறிமுகங்களில் ஒன்றாகும்.

3200+ புதிய ஸ்டோர்கள் எனும் அதன் தற்போதைய நிலைக்குக் கூடுதலாக, Ola Electric அதன் மலிவு விலை உயர்தர EVகளின் போர்ட்ஃபோலியோவை பெருநகரங்கள், அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் உள்ள நுகர்வோருக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது.

சர்வீஸ் சென்டர்களுடன் இணைந்து அமைந்துள்ள இந்தக் ஸ்டோர்கள், வாடிக்கையாளர்களுக்கு வகையினத்தில் சிறந்த விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்து, ஒரு பில்லியன் இந்தியர்களுக்கு #SavingsWalaScooter புரட்சியை வலுப்படுத்தும்.
#SavingsWalaScooter பிரச்சாரமானது Ola Electric-ன் உறுதிப்பாட்டுடன் மின்சார இயக்கத்தை ஜனநாயகப்படுத்துவதற்கும், ICE வாகனங்களிலிருந்து இந்தியாவை தீர்க்கமாக மாற்றுவதற்கும் ஒத்துப்போகிறது.

அதன் நேரடியாக-நுகர்வோருக்கான (D2C) மாடலைப் பயன்படுத்துவதன் மூலம், Ola ஒவ்வொரு குடும்பத்திற்கும் EV உரிமையை நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்கிறது, வாங்குவதன் தடைகளை உடைத்து, அதிகரித்து வரும் பெட்ரோல் விலைகள் மற்றும் ICE வாகனங்களின் உரிமையின் அதிக விலையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

நிறுவனம் S1 Pro இன் வரையறுக்கப்பட்ட 'Sona' பதிப்பையும் அசல் 24-காரட் தூய தங்கக் கூறுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு இறுதி ஆச்சரியமாக, நிறுவனம் #OlaSonaContest மூலம் Ola S1 Pro Sonaவின் வரையறுக்கப்பட்ட யூனிட்களை வழங்கும். பங்கேற்பாளர்கள் Ola S1 உடன் ஒரு ரீலை இடுகையிட வேண்டும் அல்லது Ola கடைக்கு வெளியே ஒரு படம்/செல்ஃபியைக் கிளிக் செய்து, #OlaSonaContest எனக் குறிபி்பிட்டு Ola Electric ஐக் குறியிட வேண்டும்.

பங்கேற்பாளர்கள் டிசம்பர் 25 ஆம் தேதி ஓலா ஸ்டோர்களில் நடத்தப்படும் ஸ்கிராட்ச் மற்றும் வின் போட்டியின் மூலம் இந்த லிமிடெட்-எடிஷன் ஸ்கூட்டரை வெல்லலாம்.
Ola Electric இன் வேகமாக விரிவடையும் நெட்வொர்க் அதன் புதுமையான தயாரிப்பு போர்ட்ஃபோலியோவால் இயக்கப்படுகிறது, இதில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Gig மற்றும் S1 Z ஸ்கூட்டர் வரம்புகள் அடங்கும், இது தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டிற்கான நீடித்த, நம்பகமான மற்றும் நெகிழ்வான தீர்வுகளை வழங்குகிறது.

ரூ.39,999 முதல் துவங்கும் அறிமுக விலைகளில், கிராமப்புறங்கள் புறநகரங்கள் மற்றும் நகர்ப்புற சந்தைகளுக்கு ஏற்றவாறு, இந்த ஸ்கூட்டர்கள் EV களை முன்னெப்போதையும் விட அணுகக்கூடியதாக ஆக்குகின்றன. கூடுதலாக, ஓலாவின் S1 போர்ட்ஃபோலியோ மற்றும் வரவிருக்கும் ரோட்ஸ்டர் சீரிஸ் ஆகியவை பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றன, இது இந்தியாவின் EV சந்தைத் தலைவராக அதன் நிலையை வலுப்படுத்துகிறது.
இந்த மைல்கல் விரிவாக்கமானது, EV பயன்பாட்டில் இந்தியாவை வழிநடத்துவதற்கும் #EndICEAge இயக்கத்தை வலுப்படுத்துவதற்கும் Ola Electric நிறுவனத்தின் பணியை வலுப்படுத்துகிறது. EVகளின் எதிர்காலம் வந்துவிட்டது —முன்பை விட நெருக்கமாகவும், வேகமாகவும், அணுகக்கூடியதாகவும் மாறியுள்ளது.
- ஜென் 3 மாடலிலும் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்ற அம்சங்களே வழங்கப்படும் என்று தெரிகிறது.
- புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பைக் பிரியர்களுக்கு புது மாடல்கள் வரவர அதன் மீதான ஆர்வமும் அதிகரிக்கும். அதே சமயத்தில் தங்களின் பொருட்செலவுக்கு ஏற்றார் போல் இருந்தால் கேட்கவே வேண்டாம். கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் அறிவித்த ஓலா ஜென் 3 ஸ்கூட்டரின் டீசர் வீடியோ வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஓலா ஜென் 3 ரேஞ்ச் ஸ்கூட்டரின் அறிமுகத்திற்காக பலரும் காத்திருந்தனர்.
இந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக் அதன் ஜென் 3 ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இது தற்போதைய மாடல்களை விட அதிக அம்சங்கள் கொண்டது, மேம்பட்டது மற்றும் இலகுவானது என்று நம்பப்படுகிறது.
மோட்டார், பேட்டரி மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை ஒரு யூனிட்டில் ஒருங்கிணைக்க அந்நிறுவனம் பேட்டரி கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக ஜென்-1 மாடலில் வழங்கப்பட்ட 10 பிராசஸர்கள், ஜென்-2 மாடல்களில் நான்காக குறைக்கப்பட்டன. தற்போது ஜென் 3 மாடல்களில் இது மேலும் குறைந்து ஒற்றை பிராசஸருடன் அறிமுகம் செய்யப்படுகிறது. இது திருத்தப்பட்ட ஆர்கிடெக்ச்சரில் வயரிங் அமைப்பை பெருமளவு மாற்றியுள்ளதோடு, அதன் சிக்கலையும் குறைக்கும்.

அம்சங்களைப் பொறுத்தவரை, ஜென் 3 மாடலிலும் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்ற அம்சங்களே வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இந்த அமைப்பை இயக்கும் மென்பொருள் புதுப்பிக்கப்படும். இத்துடன் ADAS அம்சங்கள் வழங்கப்படுகிறது. எனினும், இது ஆரம்பத்தில் வழங்கப்படாமல், அப்டேட் மூலம் பின்னர் தான் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் ஓலா S1 X 2kWh மாடலின் விலை ரூ. 79,999 (எக்ஸ்-ஷோரூம்) என்று துவங்கும் என தெரிகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.59 லட்சமும், 4kWh மற்றும் 3kWh மாடல்களின் விலை முறையே ரூ. 1.5 லட்சம் மற்றும் ரூ. 1.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என தெரிகிறது.






