என் மலர்tooltip icon

    பைக்

    இந்தியாவில் இரு ஸ்கூட்டர்களை அப்டேட் செய்த ஓலா - ரேஞ்ச் மற்றும் விலை எவ்வளவு தெரியுமா?
    X

    இந்தியாவில் இரு ஸ்கூட்டர்களை அப்டேட் செய்த ஓலா - ரேஞ்ச் மற்றும் விலை எவ்வளவு தெரியுமா?

    • இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஓலாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4,680 பேட்டரி செல்களால் நிரம்பியுள்ளன.
    • ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 11kW மிட்-டிரைவ் மின்சார மோட்டாரைப் பயன்படுத்துகிறது.

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் 2025 ஓலா S1 ப்ரோ பிளஸ் மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 1.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஓலாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4,680 பேட்டரி செல்களால் நிரம்பியுள்ளன.

    ஓலா எஸ்1 ப்ரோ பிளஸ் விலை முன்பு ரூ. 2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது, இது தற்போதைய விலையை விட ரூ. 30,000 அதிகம். அதேபோல், 2025 ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் விலை ரூ. 1.90 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 34,000 குறைவாகும்.

    வாடிக்கையாளர்கள் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களையும் அருகில் உள்ள ஓலா டீலர்ஷிப் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ முன்பதிவு செய்யலாம். 2025 நவராத்திரி பண்டிகையின் போது, அதாவது செப்டம்பர் 2025 கடைசி வாரத்தில் இந்த மாடல்களின் டெலிவரி தொடங்கும்.



    ஓலா எஸ்1 ப்ரோ பிளஸ் மாடலில் 13kW (17.5bhp) மின்சார மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 5.3kWh வேரியண்டிற்கு ஸ்கூட்டரை அதிகபட்சமாக மணிக்கு 141 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்துகிறது. 4kWh வேரியண்ட் அதிகபட்சமாக மணிக்கு 128 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் 5.3kWh வேரியண்ட் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர்கள் (IDC) வரை செல்லும் ரேஞ்ச் வழங்குகிறது. அதே நேரத்தில் 4kWh வேரியண்ட் 242 கிலோமீட்டர்கள் (IDC) வரை ரேஞ்ச் வழங்குகிறது.

    ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 11kW மிட்-டிரைவ் மின்சார மோட்டாரைப் பயன்படுத்துகிறது. இது மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தை வழங்குகிறது. ரோட்ஸ்டர் எக்ஸ் பிளஸ் 9.1kWh வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 501 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. அதே நேரத்தில் 4.5kWh வேரியண்ட் 252 கிலோமீட்டர்கள் ரேஞ்ச் வழங்குகிறது.

    Next Story
    ×