மணமகள் நடனமாட உதவிய ஓலா ஸ்கூட்டர்

மணமகள் நீண்ட நாட்களாக பயிற்சி செய்திருந்த நடனத்தை ஆட முடியாதோ என கண்ணீர் வடிக்க தொடங்கினார். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணமகள் நடனமாட உதவிய ஓலா ஸ்கூட்டர்
Published on

ஓலா ஸ்கூட்டரின் புளுடூத் வசதி மூலம், மணமகள் தனது திருமணத்தில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது திருமணத்தில் நடனமாட வேண்டும் என்ற மணமகளின் ஆசை நிறைவேறியது என்ற தலைப்புடன் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், மணமகள் நடனமாட தயாரான போது திருமணம் நடக்கும் இடத்திற்கு போலீஸ் அதிகாரிகள் வந்து ஸ்பீக்கரில் பாட்டு போடக்கூடாது என தடை போட்டுள்ளனர்.

இதனால் மணமகள் நீண்ட நாட்களாக பயிற்சி செய்திருந்த நடனத்தை ஆட முடியாதோ என கண்ணீர் வடிக்க தொடங்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் ஓலா ஸ்கூட்டரை மண்டபத்திற்குள் கொண்டு வந்து மேடைக்கு அருகில் நிறுத்தி ஸ்கூட்டரில் இருக்கும் ஸ்பீக்கருடன் புளுடூத் வாயிலாக இணைத்து பாட்டு போட்டனர். பின்னர் மணமகள் தனது ஆசைப்படி நடனமாடிய காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோவை ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் தளத்தில் டேக் செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com