என் மலர்
நீங்கள் தேடியது "Ampere"
- புதிய ஸ்கூட்டரில் 2.3 kWh LPF பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
- LPF பேட்டரி 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வருகிறது.
கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் மின்சார இருசக்கர வாகன நிறுவனமான ஆம்பியர், இந்தியாவில் மேக்னஸ் கிராண்ட் குடும்ப ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. புதிய மேக்னஸ் கிராண்ட் மாடல் அசத்தலான ஸ்டைல், சௌகரியம், ஆயுள், பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட LFP பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய தரநிலைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது.
ஆம்பியர் பிரான்டின் புதிய மேக்னஸ் கிராண்ட் ஸ்கூட்டர் விலை ரூ.89,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆம்பியர் மேக்னஸ் நியோவை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் மேக்னஸ் கிராண்ட், பெரும்பாலான வடிவமைப்பு சிறப்பம்சங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் அதன் புதிய குடும்ப ஸ்கூட்டரை இரண்டு புதிய டூயல் டோன் பிரீமியம் நிறங்கள்- மேட்சா கிரீன் மற்றும் ஓஷன் புளூ ஆகியவற்றுடன், கோல்டு ஃபினிஷ் வழங்கியுள்ளது. மேலும், இது இப்போது வலுப்படுத்தப்பட்ட கிராப் ரெயில், மேம்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம், விசாலமான இருக்கை மற்றும் அதிக சுமை தாங்கும் திறன் ஆகியவற்றுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அம்சங்களைப் பொருத்தவரை, புதிய ஸ்கூட்டரில் 2.3 kWh LPF பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 80-95 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. LPF பேட்டரி 5 ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வருகிறது.
அறிமுகத்தின் போது, கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டியின் நிர்வாக இயக்குனர் விகாஸ் சிங் கூறுகையில், "புதிய மேக்னஸ் கிராண்ட் மாடல் ஆம்பியரின் நிஜ உலக செயல்திறன், பாதுகாப்பு மற்றும் வடிவமைப்பில் கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது. குடும்பங்கள் மற்றும் பயணிகளின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், ஸ்டைல், ஆயுள் மற்றும் உறுதித்தன்மையின் இணக்கமான கலவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்றார்.
- ஆம்பியர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
- பண்டிகை கால சிறப்பு சலுகை விற்பனை ஆம்பியர் கோ எலெக்ட்ரிக் பெஸ்ட் பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.
கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு பண்டிகை காலத்தை ஒட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. "ஆம்பியர் கோ எலெக்ட்ரிக் ஃபெஸ்ட்" பெயரில் சிறப்பு சலுகை விற்பனை நடத்தப்படுகிறது. அதன்படி ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு 95 சதவீதம் வரையிலான நிதி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் மாத தவணைக்கு ஆண்டு வட்டி 8.25 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வாகனங்களை எக்சேன்ஜ் செய்வோருக்கு அசத்தல் சலுகைகள், ரூ. 2 ஆயிரத்து 500 மதிப்புள்ள கூடுதல் பலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் டெஸ்ட் ரைடு செய்து மேக்னஸ் இஎக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக வெல்லும் வாய்ப்பு உள்ளிட்டவை பண்டிகை கால சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் அரசு மற்றும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கு பண்டிகை கால சிறப்பு பலன்கள் வழங்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பு சலுகைகள் நாடு முழுக்க ஆம்பியர் விற்பனை மையங்களில் வழங்கப்படுகிறது. இவை அக்டோபர் 31, 2022 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது ஆம்பியர் நிறுவனம்- மேக்னஸ் இஎஸ், ரியோ பிளஸ் என இரண்டு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. ஆம்பியர் இஎக்ஸ் மாடலில் 2.1 கிலோவாட் மோட்டார், 60 வோல்ட், 38.25 ஏஹெச் மேம்பட்ட லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 80 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
ஆம்பியர் ரியோ பிளஸ் மாடலில் 250 வாட் பிஎல்டிசி மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். முழு சார்ஜ் செய்தால் 58 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்திய சந்தையில் மேக்னஸ் இஎக்ஸ் விலை ரூ. 77 ஆயிரத்து 249 என்றும் ரியோ பிளஸ் விலை ரூ. 61 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.






