search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TVS Motors"

    • டிவிஎஸ் நிறுவனம் ரோனின் பைக்கை அப்டேட் செய்தது.
    • புதிய பைக்கின் விற்பனை அடுத்த ஆண்டு துவங்குகிறது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோனின் 2025 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகப்படுத்தியது. மோட்டோசோல் 4.0 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட முற்றிலும் புதிய ரோனின் 2025 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக அமைகிறது.

    2025 டிவிஎஸ் ரோனின் மோட்டார்சைக்கிளின் விலை அடுத்த மாதம் அறிவிக்கப்படும். 2025 ரோனின் மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் சார்கோல் எம்பெர் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது முந்தைய ஆண்டு மாடலின் டெல்டா புளூ மற்று்ம ஸ்டார்கேஸ் பிளாக் நிறங்களுக்கு மாற்றாக அமைகிறது.

    புதிய ரோனின் மாடல் SS, DS மற்றும் TD என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் DS வேரியண்டில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிலும் 225.9சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.1 ஹெச்பி பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக் 109.77சிசி ஏர்-கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ரேடியான் மோட்டார்சைக்கிளின் ஆல்-பிளாக் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது ரேடியான் மாடலின் என்ட்ரி லெவல் மாடல் ஆகும். அந்த வகையில், இந்த வேரியண்ட் விலை ரூ. 59 ஆயிரத்து 880, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டிவிஎஸ் ரேடியான் மாடல் தற்போது மூன்று (பேஸ், டிஜி டிரம் மற்றும் டிஜி டிஸ்க்) வெவ்வேறு வேரியண்ட்கள் மற்றும் ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறம் கொண்ட வேரியண்ட் கிளாஸ் பிளாக் ஃபினிஷ், வைட் இன்சர்ட்களை கொண்டிருக்கிறது.

     


    இத்துடன் டிவிஎஸ் மற்றும் ரேடியான் பேட்ஜிங் கான்டிராஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஒட்டுமொத்தோற்றம் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் கவர் மட்டும் பிரான்ஸிஷ் கோல்டு நிறம் கொண்டிருக்கிறது.

    மற்ற ரேடியான் மாடல்களில் உள்ளதை போன்ற 109.77சிசி ஏர்-கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 8 ஹெச்பி பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது.

    • விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு வழங்கப்படுகிறது.
    • இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ரோனின் மோட்டார்சைக்கிள் விலையை இந்திய சந்தையில் குறைத்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.

    விலை குறைப்பின் படி டிவிஎஸ் ரோனின் எஸ்எஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 14 ஆயிரம் வரை குறைவு ஆகும். இந்த விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    திடீர் விலை குறைப்பு தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், ரோனின் எஸ்எஸ் மாடலில் எல்இடி ஹெட்லைட், இன்செட் டிஆர்எல், எல்இடி டெயில் லைட், எல்சிடி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த பைக்கின் ஃபிரேமில் யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனேஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த பைக் மோனோடேன் நிற ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பைக்கின் டாப் எண்ட் வேரியண்ட்கள் டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

    டிவிஎஸ் ரோனின் மாடலில் 225.9சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 20.1 ஹெச்பி பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • மெக்கானிக்கல் அடிப்படையில் புதிய மாற்றங்களை பெற்றுள்ளது.
    • இந்த பைக்கில் 312.2சிசி லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளின் 2024 எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய அபாச்சி RR 310 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அடிப்படையில் புதிய மாற்றங்களை பெற்றுள்ளது.

    அதன்படி இந்த பைக்கின் ஒட்டுமொத்த டிசைன் அப்படியே உள்ளது. இத்துடன் புதிய அபாச்சி ஸ்டிக்கர்கள் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகின்றன. இந்த பைக்கின் ரேசிங் ரெட் நிறத்தின் விலை ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    இதன் பைக்கின் குயிக்ஷிப்டர் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 92 ஆயிரமும், பாம்பர் கிரே நிறத்திற்கான விலை ரூ. 2 லட்சத்து 97 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த பைக்கின் விங்லெட்கள் 3 கிலோ வரை டவுன்ஃபோர்ஸ் உறுவாக்கும் திறன் கொண்டுள்ளன. இத்துடன் டிரான்ஸ்பேரன்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய அபாச்சி பைக்கில் 312.2சிசி லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்இடி லைட்கள், டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் உள்ளது. 

    • அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்படுகிறது.
    • புது மோட்டார்சைக்கிள் சிறு மாற்றங்களுடன் வெளியாகும் என்று தெரிகிறது.

    டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அப்டேட் செய்கிறது. புதுப்பிக்கப்பட்ட அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் அடுத்த வாரம் (செப்டம்பர் 16) இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

    2018 ஆம் ஆண்டு முதல் இந்த மோட்டார்சைக்கிள் பெருமளவு அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. இதுதவிர டிவிஎஸ் நிறுவனத்தின் ஃபேர்டு மோட்டார்சைக்கிள் மாடல் சமீபத்தில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. புது மோட்டார்சைக்கிள் பெருமளவு மாற்றங்கள் இன்றி வெளியாகும் என்று தெரிகிறது.

    தற்போதைய அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிள் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புது மாடல் சிறு அப்டேட்களுடன் விற்பனைக்கு வரும் போது அதன் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.

    • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே மிகப்பெரிய பேட்டரி கொண்டுள்ளது.
    • இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வந்தது.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஒருவழியாக தனது ஐகியூப் ST வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டி.வி.எஸ். ஐகியூப் ST மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிகப்பெரிய பேட்டரி கொண்டுள்ளது.

    புதிய ஐகியூப் வேரியண்ட் இதே ஸ்கூட்டரின் 3.4 கிலோவாட்ஹவர் பேட்டரி கொண்ட வெர்ஷனை விட ரூ. 40 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் ST மாடல் தற்போது தான் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வந்தது.

    அந்த வகையில், இந்த ஸ்கூட்டர் முதலில் முன்பதிவு செய்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டரை கடந்த 2022 ஜூலை 15 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி போனஸ் சலுகையின் கீழ் ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    புதிய ஐகியூப் ST வேரியண்ட் 3.4 கிலோவாட் ஹவர் மற்றும் 5.1 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 5.1 கிலோவாட் ஹவர் வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. புதிய ஐகியூப் ST வேரியண்டின் இரண்டு வெர்ஷன்களுடன் 950 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. 

    • இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.
    • அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று டி.வி.எஸ். XL100.

    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான XL100 மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. முதற்கட்டமாக டி.வி.எஸ். XL எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்காக E-XL மற்றும் XL EV என இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.

    காப்புரிமை கோரியிருப்பதை அடுத்து, டி.வி.எஸ். நிறுவனம் தனது XL மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக டி.வி.எஸ். XL100 விளங்குகிறது.

     


    ஐகியூப் மாடலின் வெற்றியை தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் E-XL மற்றும் XL EV மாடல்களை பயன்படுத்த டி.வி.எஸ். நிறுவனம் காப்புரிமை கோரியிருக்கிறது.

    எனினும், இதுபற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது டி.வி.எஸ். XL100 பெட்ரோல் மாடலின் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 59 ஆயிரத்து 695, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மொபெட் பிரிவில் விற்பனை செய்யப்படும் ஒற்றை மாடலாக கைனடிக் E லூனா விளங்குகிறது. இதன் விலை ரூ. 64 ஆயிரத்து 990 என துவங்கி அதிகபட்சம் ரூ. 74 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த முயற்சி.
    • உற்பத்தி மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரிப்பு.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஐ.சி. என்ஜின் மாடல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

    எலெக்ட்ரிக் மற்றும் அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் முயற்சியில் டி.வி.எஸ். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் டி.வி.எஸ். நிறுவனம் எதிர்காலத்தில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டி.வி.எஸ். நிறுவனம் 5 கிலோவாட் முதல் 25 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    டி.வி.எஸ். நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டிலேயே டி.வி.எஸ். நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டி.வி.எஸ். எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

    • டி.வி.எஸ். நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்.
    • உள்நாட்டு விற்பனையில் டி.வி.எஸ். நிறுவனம் 25.01 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச விற்பனையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக யூனிட்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது.

    2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிருவனம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 292 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு விற்பனையான 3 லட்சத்து 43 ஆயிரத்து 614 யூனிட்களை விட அதிகம் ஆகும். இதுதவிர மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடும் போது, 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனையான 3 லட்சத்து 85 ஆயிரத்து 443 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

    இதன் மூலம் டி.வி.எஸ்.-இன் உள்நாட்டு விற்பனை 25.01 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் அதிகம் விற்பனையான மாடல்களில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த மாடல் 91 ஆயிரத்து 824 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 19.19 சதவீதம் அதிகம் ஆகும். 

    • ரோனின் டி.டி. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ட்ரிபில் டோன் நிம்பஸ் கிரே நிறத்தில் கிடைக்கிறது.
    • இந்த மாடலிலும் 225.9 சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ரோனின் 225 மாடலின் ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்பெஷல் எடிஷன் டி.வி.எஸ். ரோனின் டி.டி. மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ஏராளமான மாற்றங்கள், புதிய நிற ஆப்ஷனில் கிடைக்கிறது.

    டி.வி.எஸ். ரோனின் டி.டி. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ட்ரிபில் டோன் நிம்பஸ் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் புதிய கிராஃபிக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயின்ட் பிரைமரி டோனாகவும் வைட் நிறம் இரண்டாவது டோனாகவும், மூன்றாவதாக ரெட் நிற ஸ்டிரைப் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மோட்டார்சைக்கிளின் ரிம்களில் டி.வி.எஸ். ரோனின் பிராண்டிங், பிளாக்டு-அவுட் பாகங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யு.எஸ்.பி. சார்ஜர், வைசர் மற்றும் எஃப்.ஐ. கவர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    டி.வி.எஸ். ரோனின் டி.டி. ஸ்பெஷல் எடிஷன் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும் 225.9 சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.1 ஹெச்.பி. பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    • டி.வி.எஸ். அபாச்சி RTR310 மாடலில் கிளைமேட் கண்ட்ரோல் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • அபாச்சி RTR310 மாடலிலும் 312.2சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் உள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது சக்திவாய்ந்த மற்றும் புதிய நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலை அபாச்சி RTR310 பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் அபாச்சி RR310 மோட்டார்சைக்கிளை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடலில் ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லைட்கள், கூர்மையான ஃபியூவல் டேன்க் மற்றும் ஷிரவுட்கள், இரட்டை பீஸ் இருக்கைகள், உயர்த்தப்பட்ட டெயில் பகுதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் எக்சாஸ்ட் அபாச்சி RR310 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒற்றை பீஸ் டியுபுலர் ஹேண்டில்பார் மற்றும் ரியர் செட் ஃபூட்பெக்குகள் உள்ளன.

     

    அபாச்சி RTR310 மாடலிலும் 312.2சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 35 ஹெச்.பி. பவர், 28.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது.

    புதிய டி.வி.எஸ். அபாச்சி RTR310 மாடலில் ரிவைஸ்டு ஃபிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் இரட்டை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    எல்.இ.டி. லைட்கள் தவிர இந்த மாடலில் முழுமையான டிஜிட்டல் டி.எஃப்.டி. ஸ்கிரீன் மற்றும் கனெக்ட் கோ ப்ரோ ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய அபாச்சி RTR310 மாடலில் கிளைமேட் கண்ட்ரோல் சீட், 6-ஆக்சிஸ் IMU யூனிட், கார்னெரிங் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய டி.வி.எஸ். அபாச்சி RTR310 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 43 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் கே.டி.எம். டியூக் 390, பி.எம்.டபிள்யூ. G 310 R மற்றும் கே.டி.எம். 250 டியூக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

    • டி.வி.எஸ். எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய டிசைன் கொண்டிருக்கிறது.
    • இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 140 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இளைஞர்களை கவரும் வகையிலான ஸ்டைலிங் மற்றும் அசத்தல் தோற்றம் கொண்டிருக்கிறது.

    புதிய டி.வி.எஸ். எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கிறது. இதன் தோற்றம் க்ரியான் கான்செப்ட் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் சில ஆண்டுகளுக்கு முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் எல்.இ.டி. மின்விளக்குகள், 10.2 அங்குல அளவில் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

     

    இதில் உள்ள 4.44 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 140 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. மேலும் இதில் உள்ள மோட்டார்கள் அதிகபட்சம் 11 கிலோவாட் வரையிலான திறன் கொண்டிருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும்.

    ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், 220mm முன்புற டிஸ்க், பின்புறத்தில் 195mm டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டி.வி.எஸ். எக்ஸ் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ×